வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.
வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
Published on

மதுரை

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com