search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA"

    • கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
    • ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    திருப்பதி:

    டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்யாண் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினை ஏற்பட்டது. பா.ஜ.க.வும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு பிரச்சனை உள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை பேசுவது ஏற்புடையது அல்ல.

    எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படும்.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை.

    ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்பது கிடையாது
    • மெஜாரிட்டி கிடைத்த போதிலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் அரசு அமைத்தது

    எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் நடைபெற்றது. 2-வது கூட்டத்தில் ஓரளவிற்கு மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்றே கூறலாம். நேற்றைய கூட்டத்திற்குப்பிறகு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதற்கிடையே பா.ஜனதா நேற்று டெல்லியில தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதில் 39 கட்சிகள் இடம் பிடித்திருந்தன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான கட்சிகளை பற்றி கேள்விப்பட்டதே இல்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கிண்டல் செய்திருந்தார்.

    அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பங்களிப்பால் ஏற்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த கட்சியும் பெரிதோ, சிறிதோ அல்ல. பா.ஜனதா 2014 மற்றும் 2019-ல் மெஜாரிட்டி பெற்றிருந்தது. இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைத்தது'' என்றார்.

    • பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்
    • பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் மரியாதை வழங்கப்பட்டது

    டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேர்தல்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளேடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த இருபெரும் தலைவர்களின் வழியிலேயே அ.தி.மு.க. செயல்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கொரோனாவால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற நெருக்கடி ஏற்படவில்லை. 9 ஆண்டுகள் மோடி சிறப்பான ஆட்சி அளித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி இருக்கிறார்.

    இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம்.

    தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அப்படியே நீடிக்குமா என்று கேட்கிறீர்கள். அந்த கேள்விக்கே இடம் கிடையாது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கே: நேற்றைய கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா? அங்கு சிறு சிறு பிரச்சினைகள் கூட்டணியில் இருப்பதுபோல் தெரிகிறதே?

    ப: உங்களது பார்வைக்கு அப்படி தெரியலாம். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரையில் ஒருமித்த கருத்தோடுதான் அனைத்து கட்சிகளும் செயல்படுகின்றன. பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடு இல்லை.

    இருந்தாலும் அ.தி.மு.க. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. நேற்றைய தேதி வரையில் 1 கோடியே 72 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் பெரிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    1½ கோடி உறுப்பினர்கள்ளாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க. தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இன்று இளைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை பற்றி இப்போது எதுவும் பேசப்படவில்லை.

    கே: குட்கா ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு இருந்ததாகவும் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதால் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

    ப: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு மட்டுமே. தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலினுக்கும் ஊழலை பற்றி பேசுவதற்கு அருகதையே இல்லை. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும் ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டனர்.

    நேற்று மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. அவரும் சிறை சென்று வந்துள்ளார். அவர்களது அணியில் உள்ள பல கட்சி தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இப்படி ஊழல் செய்வது தி.மு.க.தான். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது எனது அரசு மீது குற்றம்சாட்டி தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

    பொய்யான வழக்கு என்பதற்கு இதுவே உதாரணம். வழக்கை ரத்து செய்துள்ளனர்.

    கே: மோடி அருகில் அமர இடம் கிடைத்துள்ளது. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. சந்தோஷமாக இருக்கிறீர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    ப: நாங்கள் உழைப்பதைத்தான் நம்புகிறோம். என்னிடத்தில் மட்டுமல்ல. மோடி எல்லோரிடத்திலும் நெருக்கமாகத்தான் உள்ளார். அவர் யரிடத்திலும் எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை.

    கே: மோடியுடன் நெருக்கமாக இருப்பதால் மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் விவகாரத்தில் அவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாமே?

    ப: மு.க.ஸ்டாலினும்தான் கர்நாடக அரசுடன் நெருக்கமாக உள்ளார். கர்நாடக அரசுடன் அவர் பேச மறுப்பது ஏன்? எங்களை பொறுத்தவரையில் மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

    கே: கொடநாடு வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். கூறி இருக்கிறாரே?

    ப: அவருக்கு வேறு வழிஇல்லை. ஓ.பி.எஸ். இப்போது தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். கொடநாடு வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை அ.தி.மு.க. அரசு கைது செய்தது. அவர்களுக்கு ஜாமின் போட்டவர்கள்தான் தி.மு.க.வினர்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    பேட்டியின்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பு
    • டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்பு

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.

    அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள்.

    நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.

    அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ''நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்'' என்றார்.

    திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

    சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.

    • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை.
    • என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    தேசத்தை வலுப்படுத்துவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுமே கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நேர்மறையான அரசியலையே நாங்கள் செய்தோம். வெளிநாட்டு சக்திகளின் உதவியை பெறவே இல்லை. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது.

    NDA கூட்டணியில், N என்றால் New India (புதிய இந்தியா), D என்றால் Developed Nation (வளர்ந்த நாடு), A என்றால் Aspirations of people and regions (மக்கள் மற்றும் பிராந்தியங்களின் விருப்பங்கள்)

    என்டிஏ கூட்டணியானது கட்டாயத்தின்பேரில் அமைந்த கூட்டணி அல்ல, பங்களிப்புடன் கூடிய கூட்டணி. இங்குள்ள அனைத்து கட்சிகளும் பங்களிப்பை வழங்குகின்றன, அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, எதிர்க்கட்சிகளோ அவர்களை பிரிக்கின்றன. நாங்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் உழைக்காமல், எதிர்காலத்தையும் சிறப்பாக்க பாடுபடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதலில் நாடு, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், மக்களுக்கு அதிகாரம். அதன்பிறகுதான் அரசியல்

    2024 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும். மேலும் அனைத்து கட்சிகளும் வளர்ச்சியை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். நாம் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
    • பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 26 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாமகவின் ஏகே மூர்த்தி, த.மா.கா.வின் ஜிகே வாசன் மற்றும் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உட்பட 38 கட்சிகளின் பிரதிநிதிகள் நாடெங்கிலும் இருந்து கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்துள்ளனர்.

    இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் பங்கேற்க வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கூட்டணி பல்வேறு சோதனைகளை கடந்து, பல தடைகளை கடந்த ஒரு வெற்றிக்கூட்டணி. தேசிய வளர்ச்சிக்கும் மாநிலங்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் உருவானது நமது கூட்டணி," என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்த சமயத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது
    • தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்

    காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 38 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    38 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும், மாநில கட்சிகள் கூட்டணியில் இருப்பதை பா.ஜனதா சாதகமாக பார்க்கிறது.

    மோடி தலைமையில் கடந்த 9 வருடம் நல்லாட்சியை கொடுத்துள்ளோம். அதன் தொடர்ச்சி செயல்முறைதான் இது என நட்டா தெரிவித்துள்ளார்.

    பீகாரை பொறுத்தவரைக்கும் நிதிஷ் குமார் உடன் கூட்டணி வைத்திருந்தது. நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால், லோக் ஜனசக்தி கட்சி மட்டுமே பா.ஜனதாவில் உள்ளது. சிராக் பஸ்வான் மற்றும் அவரது மாமா ஆகியோரை ஒன்று சேர்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் 6 சதவீதம் பஸ்வான் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறது. மேலும், உபேந்திர சிங் குஷ்வாகா, முகேஷ் சஹானி, ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோர் கட்சியை கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    உத்தர பிரதேசததில் வலுவாக இருக்கும் பா.ஜனதா சுகல்வே் பாரதிய சமாஜ் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்க்க இருக்கிறது.

    தமிழகத்தில் அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுடனும், மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசிவாத காங்கிரஸ், ஷிண்டுயின் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பத்தில முக்கிய கவனம் செலுத்தும்.

    வடகிழக்கு மாநிலங்களில ஏழு கட்சிகள் பா.ஜனதா கூட்டணியில் உள்ளது. பவன் கல்யாண், கேரளாவின் தாமஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைய இருக்கின்றன.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    • தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பலத்தை காட்ட விரும்பும் பா.ஜனதா
    • தங்களது கூட்டணியில் 30 கட்சிகள் உள்ளது என காட்டுவதற்கான இந்த கூட்டம்

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 14 கட்சிகள் கலந்து கொண்டன.

    இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை கூட்டி, தங்களது பலத்தை காண்பிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதனால் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டுகிறது. இதற்கான 30 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த கூட்டம் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடியுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.

    பெரும்பாலான கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே 24 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. தற்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    பீகாரில் இருந்து நான்கு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) சார்பில் சிராக் பஸ்வான், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில் ஜித்தன் ராம் மஞ்சி, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி சார்பில் உபேந்திரா சிங் குஷ்வாகா, விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் முகேஷ் சஹானி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

    உத்தர பிரதேசத்தில் இருந்து சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஓம் பிரகாஷ் ராஜ்பார், முன்னதாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தாராசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    தெலுங்குதேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, பாதல் குடும்பத்தின் ஷிரோமணி அகாலி தளம் பா.ஜனதா உடன் நெருக்கமாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தனியாக போட்டியிடும் வாய்ப்புள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பா.ஜனதா பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 24 கட்சிகள் உள்ளன. பா.ஜனதா, அதிமுக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசிய மக்கள் கட்சி (NPP), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NPPP), சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (SKM), ஜனநாயக் ஜந்தா கட்சி (JJP), இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (IMKMK), ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கள் யூனியன் (All Jharkhand Students Union), இந்திய குடியரசு கட்சி (RPI), மிசோ தேசிய முன்னணி (MNF), தமிழ் மாநில காங்கிரஸ் (TMC), ஐ.பி.எஃப்.டி. (திரிபுரா), போடோ மக்கள் கட்சி (BPP), பாட்டாளி மக்கள் கட்சி (PMK), மகாரஸ்த்ரவாடி கோமந்தாக் கட்சி (Mahasthravadi Gomantak Party), அப்னா தல், அசாம் கன பரிசத் (AGP), ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி, நிஷாத் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி (எல்) (UPPL), அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரி (AIRNC), ஷிரோமணி அகாலி தளம் சயுங்க்த் (தின்ட்சா), ஜனசேனா (பவன் கல்யாண்).

    அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஷ்தானி அவாம் மோர்ச்சா), ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி, விகாஷீல் இன்சான் சாட்கி, ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சி புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப் போகிறது.

    இந்த கூட்டம் டெல்லி அசோக் ஓட்டலில் நாளை மாலை நடைபெற இருக்கிறது.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் சஎன்று சுதாகர்ரெட்டி உறுதி கூறினார்.
    • மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும்.

    விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப் படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

    செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருக்கும் போது அவர் மீது மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணை கோரினார். ஆனால் தற்போது அதனை எதிர்க்கிறார். தி.மு.க.வில் சேர்ந்தால் ஊழல் மாயமாகி விடும் என்பது முதல்வரின் கருத்தாக உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரி திரவுபதி முர்மு இன்று ஒடிசா பயணம்.
    • முர்முவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்.

    புவனேஸ்வர்:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இந்நிலையில் தமது சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு இன்று செல்ல உள்ள திரவுபதி முர்மு, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்பட அம்மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

    இந்நிலையில், ஒடிசா வரும் திரௌபதி முர்மு அரசு விருந்தினராக நடத்தப்படுவார் என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு எஸ்கார்ட் பைலட் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், மேலும் அவரது வருகையையொட்டி வரவேற்பு, தங்குமிடம் மற்றும் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக ஒடிசா ஆளும் கட்சியான பிஜூ ஜனதாதளம் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்திருந்தார். மேலும் முர்முவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா மற்றும் சுயேச்சை எம்எல்ஏ மகரந்த முதுலி ஆகியோரை அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் பின்தங்கியுள்ளது.
    ராஞ்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், மீண்டும் மோடி பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிய நிலவரப்படி, மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    ஹசாரிபாக் தொகுதியில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா 1,16,819 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சாகுவை விட முன்னிலை பெற்றிருந்தார்.



    லோகர்தகா தொகுதியில் மத்திய இணை மந்திரியும் பாஜக வேட்பாளருமான சுதர்சன் பகத், காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவ் பகத்தை விட 5852 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். முன்னாள் முதலமைச்சர்கள் சிபு சோரன், பாபுலால் மராண்டி ஆகியோர் தும்கா மற்றும் கோடர்மா தொகுதிகளில் பின்தங்கினர்.

    மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான அர்ஜுன் முண்டா, குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பின்தங்கினார். பாஜக எம்பியும் மாநில பாஜக தலைவருமான லட்சுமண் கிலுவா, சிங்பம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா கோடாவைவிட 44962 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.
    ×