என் மலர்

  நீங்கள் தேடியது "Presidential candidate"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரி திரவுபதி முர்மு இன்று ஒடிசா பயணம்.
  • முர்முவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்.

  புவனேஸ்வர்:

  குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இந்நிலையில் தமது சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு இன்று செல்ல உள்ள திரவுபதி முர்மு, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்பட அம்மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

  இந்நிலையில், ஒடிசா வரும் திரௌபதி முர்மு அரசு விருந்தினராக நடத்தப்படுவார் என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒரு எஸ்கார்ட் பைலட் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், மேலும் அவரது வருகையையொட்டி வரவேற்பு, தங்குமிடம் மற்றும் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

  முன்னதாக ஒடிசா ஆளும் கட்சியான பிஜூ ஜனதாதளம் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்திருந்தார். மேலும் முர்முவை ஆதரிக்குமாறு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா மற்றும் சுயேச்சை எம்எல்ஏ மகரந்த முதுலி ஆகியோரை அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனாதிபதி வேட்பாளரை ஏன் எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் பேசினார்.
  • கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

  மதுரை

  மதுரை புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடந்தது.

  அலங்கை செல்வரசு வி.பி. இன்குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ப.கதிரவன் வரவேற்று பேசினார்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

  தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் மாறி இருக்கிறது. எங்களை புறம் தள்ளிவிட்டு, தமிழக அரசியல் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. அம்பேத்கரை ஒழுங்காக படித்தவர்கள் யாரும் சாதியை பற்றி பேசமாட்டார்கள்.

  அவர்களுக்கு ஒரே எதிரி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை எதிர்ப்பதற்கு காரணம், அவர் எந்த கட்சியின் பின்னணியில் இருக்கிறார் என்பதே.

  மக்களை ஏமாற்றுவதற்காக பா.ஜ.க., இஸ்லாமியர், தலித் பழங்குடியினருக்கு உயர்ந்த பதவிகளை அளித்து அவர்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் அவரை எதிர்க்கிறோம். அவருடைய கொள்கை எங்களுக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் மதுரை கிழக்கு தொகுதி செலயாளர் கார்வண்ணன், வழக்கறிஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அரச.முத்து பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
  • காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கே நியமிக்கப்பட்டுள்ளார்

  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் ஜூன் 15 முதல் ஜூன் 29 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும்.

  எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கேவை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.

  இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் அந்த கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ×