search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakadu"

    • களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசாமிக்கும், சுரேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (வயது 20). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவசாமி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 61). இவர் தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரியில் ஊழியராக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி அருகே பாணாங்குளம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன், அவரது மகள் நிவேதா படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது.
    • தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது.

    • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.

    கடமான்

    அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஸ்டீபன்ராஜ், (30), முத்துராஜ் மகன் ராஜாசிங் (27), தங்கத்துரை மகன் ரவிக்குமார் (27), குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த முவின் (40) உள்பட சிலர் பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கடமானை வேட்டை யாடி கறியை வெட்டி பங்கு போட்டதும், மீதி இறைச்சியை காரில் எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து ரவிக்குமார், ராஜாசிங் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் தலையணை தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தலையணை சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். வனத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்புகளை யும் அவர்கள் மறித்துள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்

    இது குறித்து வனத்துறை அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புக்கு களக்காடு போலீசார் விரைந்து சென்றனர். இதையொட்டி தலையணை மூடப்பட்டது. மாலை வரை தலையணை திறக்கப்பட வில்லை. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தலையணைக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ், முவின் உள்ளிட்ட கும்பலை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாசிங் புதுமாப்பிள்ளை ஆவார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்ட கடமான் வயிற்றில் குட்டி இருந்துள்ளது. அதனை கொடூரமான முறையில் கீறி வெளியே எடுத்த கும்பல் கடமானின் பாகங்களுடன் குட்டியின் உடலையும் கிணற்றில் வீசிய நிலையில் போலீசில் சிக்கி உள்ளனர்.

    • மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.
    • இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த ராபீன் , பிராங்ளின் ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர்.

    களக்காடு:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் சென்றதை அடுத்து களக்காடு அருகில் உள்ள மாவடி பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் (வயது32) பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த நவநீதன் மகன் ராபீன் (28), ரெத்தினம் மகன் பிராங்ளின் (46) ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர். இதுபோல தீபக் ராபீனை கீழே தள்ளினார். இந்த மோதலில் தீபக், ராபீன் காயமடைந்தனர். இதுகுறித்து இருவரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபீன், பிராங்ளின், தீபக்கை கைது செய்தனர்.

    • திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி வருகிற 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது.

    2 நாட்கள் தடை

    இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலில் தமிழ்மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 10-ந்தேதி (வியாழக்கிழமை), 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டும் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள்

    ஆனால் திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், 12-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் திருக்குறுங்குடி வனசரகர் யோ கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர்.
    • அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பி மகன் முத்து (வயது 27). பெயிண்டராக உள்ளார்.

    சம்பவத்தன்று மறுகால்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் என்ற சைனா செல்வகுமார் (26), பெரும்பத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர். அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    அப்போது செல்வகுமார், தங்கபாண்டியை பார்த்து நாய் குரைத்தது.

    இதில் முத்துவிற்கும், செல்வகுமார், தங்கபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் சேர்ந்து முத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதனால் காயமடைந்த முத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி செல்வ குமார், தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

    • 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.
    • மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகியதால் மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது.

    களக்காடு:

    களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் பத்மநேரி பெரியகுளத்தின் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.

    தீயணைக்கும் பணி

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மரம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகி சேதமடைந்ததால், மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நாங்குநேரி தீ அணைப்பு நிலையத்திற்கும் நெடுஞ்சாலைதுறை யினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீ அணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைதுறை ஊழி யர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதையடுத்து களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்டதும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    தீ விபத்து ஏற்பட்ட மரத்தின் அருகே அறுவடை செய்யப்பட்ட வாழைமர குப்பைகளை கொட்டப்பட்டுள்ளது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீ மரத்திலும் பற்றியதாக கூறப்படுகிறது.

    • பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • நேற்று வீட்டில் இருந்த பானுப்பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுப்பிரியா (வயது 23). இவரது கணவர் தர்மராஜா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலை யில் பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து பானுப்பிரியா கணவரை விட்டு பிரிந்து சுப்பிரமணி யபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகளுடன் கடந்த 8 மாதமாக வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த பானுப் பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி பானுப்பிரியாவின் தாயார் சமுத்திரக்கனி (46) களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான பானுப் பிரியா மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.

    • வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வளர்மதி (வயது23). நேற்று வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி அவரது தாயார் ஆவுடைதங்கம் (47) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான வளர்மதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுரேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    • முத்துக்குமார் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
    • இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திரும்ப கொடுக்க வில்லை. இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு முத்துக்குமார் பணம் தற்போது இல்லை, ஆனால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆனந்த், புதுபேட்டை அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மகாராஜன் (20), புதுபேட்டை செக்கடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கேசவன் (23) ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி முத்துக்குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றார்.

    • பீட்டர் தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார்
    • இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல் மனைவி மேகலா (வயது 36). இவர் களக்காட்டில் தையல் கடை வைத்துள்ளார். இவரது கணவரின் நண்பரான அதே ஊரை சேர்ந்த பீட்டர் (33) தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். மேகலா வும் ரூ.1 லட்சம் கொடுத்து ள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பின்ன ரும் பணம் கொடு க்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று பீட்டர், மேகலாவின் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த மேகலா, பீட்டரிடம் பணத்தை திருப்பிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பீட்டர் நீ பணம் தரவே இல்லை. பணத்தை கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் மேகலாவை அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பீட்டரை தேடி வருகின்றனர்.

    ×