என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை, மகள் படுகாயம்
- சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
களக்காடு:
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 61). இவர் தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரியில் ஊழியராக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி அருகே பாணாங்குளம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன், அவரது மகள் நிவேதா படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.






