நாங்குநேரி அருகே பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு - 2 பேருக்கு வலைவீச்சு

செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர்.அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.
நாங்குநேரி அருகே பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு - 2 பேருக்கு வலைவீச்சு
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பி மகன் முத்து (வயது 27). பெயிண்டராக உள்ளார்.

சம்பவத்தன்று மறுகால்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் என்ற சைனா செல்வகுமார் (26), பெரும்பத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர். அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

அப்போது செல்வகுமார், தங்கபாண்டியை பார்த்து நாய் குரைத்தது.

இதில் முத்துவிற்கும், செல்வகுமார், தங்கபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் சேர்ந்து முத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

இதனால் காயமடைந்த முத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி செல்வ குமார், தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com