search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalayanai"

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.
    • கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவிலும் கனமழை கொட்டியது. களக்காட்டில் 62.20 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க களக்காடு வனத்துறையினர் இன்று தடை விதித்தனர். தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    • சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது.
    • தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது.

    • களக்காடு தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள்.

    களக்காடு:

    களக்காடு தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அத்துடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளம் தணிந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே களக்காடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பனி பொழிவு காணப்படுகிறது. பருவமழையும் சரிவர பெய்ய வில்லை. இதன் காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள்.

    இந்தாண்டு தலைய ணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் காணும் பொங்கல் களை கட்டுமா? என்று சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது
    • நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது.

    இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5-ந் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

    காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின் பேரில் தலையணைக்கு செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லும் வாயில் மூடப்பட்டு, வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல 2-வது நாளாக இன்று தடைவிதித்தனர்.

    மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    களக்காடு தாமரை குளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப் பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×