தண்ணீர் வரத்து அதிகரிப்பு- களக்காடு தலையணையில் குளிக்க தடை

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவிலும் கனமழை கொட்டியது. களக்காட்டில் 62.20 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க களக்காடு வனத்துறையினர் இன்று தடை விதித்தனர். தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com