களக்காடு தலையணையில் கடும் வெள்ளம்-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறதுநேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
களக்காடு தலையணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
களக்காடு தலையணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
Published on

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது.

இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5-ந் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com