search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats"

    • எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.
    • ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். மிளகாய் மற்றும் ஆடு, மாடு விற்பனைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சந்தையில், எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை விலை போனது. இன்று 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்துள்ளது. இறைச்சி கடைக்காரர்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.ரம்ஜான் பண்டிகை எதிரொலி கொளத்தூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 

    • ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ரங்கப்பையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் நல்லக்கண்ணன். கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் வருமானம் ஈட்டுவதற்காக வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நல்லக்கண்ணன் சேரம்பாளையம் அஷ்–ட–லட்–சுமி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து உள்ளார்.

    இந்த ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் காலை ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது உள்ளே இருந்த 10 வெள்ளாடுகளும் ரத்தம் சிந்திய நிலையில், தலை, கழுத்து, உடம்பு பகுதி முழுவதும் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் , நல்லக்கண்ணன் ஆட்டுப்பட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் ஏதோ மர்ம விலங்கு அல்லது வெறி நாய் உள்ளே புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை கடித்து குதறி விட்டு சென்றதும், இதனால் 10 வெள்ளாடுகளும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து முத்தூர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயிரிழந்த வெள்ளாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த அனைத்து வெள்ளாடுகளும் அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. ஆட்டுப்பட்டிக்குள் மர்ம விலங்கு அல்லது வெறி நாய் புகுந்து கடித்து குதறியதில் உயிரிழந்த 10 வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும்.

    மேலும் உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று நல்லக்கண்ணன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோட்டாளம் ஆடு வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பாரதி நகர் கீழ தெருவை சேர்ந்தவர் கோட்டாளம் (வயது 55). இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். வீட்டின் பின்புறம் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆடுகள் அனைத்தும் கத்தின.

    இதனால் கோட்டாளமும், அவரது மனைவி மற்றும் மகனும் எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக கோட்டாளம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார்.

    அப்போது ஆடுகளை திருடி சென்றவர்கள் காமராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சாமுவேல் (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (22) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்துள்ளார். அப்போது 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 4 ஆடுகள் செத்துவிட்டன. 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவற்றை மீட்டு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயியின் பட்டியில் இருந்த ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறும்போது " செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறிநாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா? என கண்காணிக்க உள்ளோம். இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார். செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடமான காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏ.சி. மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

    • அர்ஜுனன் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 42). இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர். நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால் நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்திருந்த ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்தன.மொத்தம் 6 ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம். ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.
    • நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்த போது ஆடுகளை நாய் கடித்து குதறியது தெரியவந்தது. நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது. கடந்த சில நாட்களாக கிராமத்தில் வெறி நாய் தொல்லையால் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். கால்நடைகளை கடித்து கொல்லும் வெறிநாயினை ஊராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாக சென்றனர்.
    • சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலி, காமராஜ் காலனி, கீழத்தெருவை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு மகள் பிரித்திகா (வயது14) இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மகள் குணசுந்தரி (16).

    இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    2 பேரும் நேற்று காலை அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாகவும், வீட்டில் இருந்த ஆடுகளை மேய விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடி குடமுருட்டி ஆற்றுப்பகு திக்கு சென்றனர்.

    குடமுருட்டி ஆற்றுப்ப குதியில் சிறுமிகள் கொண்டு சென்ற இரண்டு அலுமினிய பாத்திரங்களும் மணலில் வைக்கப்பட்டிருந்தன.

    துணிகள் துவைத்து காய வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    2 பேரையும் காணவில்லை. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் ஆற்றில் குதித்து தேடினார்கள்.

    அப்போது ஆற்றில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் 2 சிறுமிகளையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் 2 பேர் பிணத்தை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பிரேதபரிசோதனைக்கு பின்னர் 2 சிறுமிகளின் உடல்களும் ஒன்பத்துவேலி காமராஜர் காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளது.

    அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வேல்முருகன் வைத்திருந்த 2 ஆடுகளும் வெறி நாய்கள் கடித்தபடி இறந்த நிலையில் கிடந்துள்ளது.
    • வேல்முருகனின் ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் பாரதி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல நேற்று ஆடுகளை ஆட்டுக்கொட்டகை யில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.

    இன்று காலை மேய்ச்சலுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்ல கொட்டகையில் சென்று பார்த்தபோது, வேல்முருகன் வைத்திருந்த 2 ஆடுகளும் வெறி நாய்கள் கடித்தபடி இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்து வேல்முருகனின் ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் கடந்த ஒரு வார காலமாகவே இப்பகுதியில் வெறிநாய்கள் கடித்து பல ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகையால், விளாத்திகுளம் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மேச்சலுக்காக சென்ற ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றுள்ளது.
    • தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் வெள்ளைச்சாமி புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் துப்பாஸ் பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56).

    விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடுகளை வெள்ளப்பட்டி மற்றும் தாளமுத்து நகர்-தருவை குளம் ரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம்.

    இதேபோல் நேற்று மேச்சலுக்காக சென்ற ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றுள்ளது. இதில் 3 ஆடுகள் இறந்தது.

    இதுகுறித்து வெள்ளைச்சாமி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து அரிசியில் விஷம் வைக்கப்பட்டதா? அதனை வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அரிகிருஷ்ணன் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
    • போலீசாரின் விசாரணையில் பரமசிவன் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு வடக்கு விலாகத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவர் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

    விஷம் வைத்து சாகடிப்பு

    வழக்கமாக ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலையில் கொட்டகையில் அடைப்பது வழக்கம்.

    வழக்கம் போல நேற்று அரிகிருஷ்ணன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது 3 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பரமசிவன் (48) என்பவர் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.

    இதைதத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். அரிகிருஷ்ணனுக்கும், பரமசிவனுக்கு வயல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அது தொடர்பான பிரச்சினையில் விஷம் வைத்து ஆடுகள் கொல்லப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.
    • 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. இந்த நிலையில் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 20 குட்டி ஆடுகள் மற்றும் 4 பெரிய ஆடுகளை கடித்துக் குதறியதில் இறந்துவிட்டது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஆடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததுடன் இது தொடர்பாக நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
    • 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

    தொடர் மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதிகளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.

    அதைப்போல இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.

    இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதைப்போலவே 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    இந்த தகவலை திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

    அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    ஆறுகளில் நீரின் போக்கைதடுக்கும் வகையில் பரவியிருந்த வெங்காயத் தாமரை செடிக ளையும் அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் காயத்ரி கிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ×