search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bitten by dogs"

    • நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன.
    • ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட கொம்மக்கோயில், கும்மாக்காளி பாளையம், உருமாண்டம் பாளையம், கூனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இது வரை பல ஆடுகள் இறந்துள்ளன.

    இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கண க்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் பெருந்துறை, பணிக்கம் பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு அருகே கூட்டமாக தங்கி இருப்பதாக தெரிய வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், ஆடு, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக மாறும் அபாயம் உள்ளது.

    எனவே ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொம்மக்கோயில் கொல்லங்காடு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆடுகளை காலை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்து விட்டது. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.

    • கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.
    • 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. இந்த நிலையில் கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 20 குட்டி ஆடுகள் மற்றும் 4 பெரிய ஆடுகளை கடித்துக் குதறியதில் இறந்துவிட்டது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஆடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததுடன் இது தொடர்பாக நாராயணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×