என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற 3 ஆடுகள் சாவு- போலீசார் விசாரணை
    X

    விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் இறந்து கிடக்கும் காட்சி.

    தூத்துக்குடியில் மேய்ச்சலுக்கு சென்ற 3 ஆடுகள் சாவு- போலீசார் விசாரணை

    • மேச்சலுக்காக சென்ற ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றுள்ளது.
    • தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் வெள்ளைச்சாமி புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் துப்பாஸ் பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 56).

    விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடுகளை வெள்ளப்பட்டி மற்றும் தாளமுத்து நகர்-தருவை குளம் ரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம்.

    இதேபோல் நேற்று மேச்சலுக்காக சென்ற ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை தின்றுள்ளது. இதில் 3 ஆடுகள் இறந்தது.

    இதுகுறித்து வெள்ளைச்சாமி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து அரிசியில் விஷம் வைக்கப்பட்டதா? அதனை வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×