என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பில் விஷம் வைத்து  3 ஆடுகள் சாகடிப்பு- ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
    X

    நெல்லை சந்திப்பில் விஷம் வைத்து 3 ஆடுகள் சாகடிப்பு- ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரிகிருஷ்ணன் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
    • போலீசாரின் விசாரணையில் பரமசிவன் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு வடக்கு விலாகத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவர் சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

    விஷம் வைத்து சாகடிப்பு

    வழக்கமாக ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலையில் கொட்டகையில் அடைப்பது வழக்கம்.

    வழக்கம் போல நேற்று அரிகிருஷ்ணன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது 3 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பரமசிவன் (48) என்பவர் ஆடுகளுக்கு விஷம் வைத்தது தெரியவந்தது.

    இதைதத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். அரிகிருஷ்ணனுக்கும், பரமசிவனுக்கு வயல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அது தொடர்பான பிரச்சினையில் விஷம் வைத்து ஆடுகள் கொல்லப்பட்டதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×