என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் ஆடுகளை திருடி சென்ற 2 வாலிபர்கள் கைது
- கோட்டாளம் ஆடு வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார்.
- மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பாரதி நகர் கீழ தெருவை சேர்ந்தவர் கோட்டாளம் (வயது 55). இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஆடு வளர்ப்பு தொழிலையும் செய்து வருகிறார். வீட்டின் பின்புறம் ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆடுகள் அனைத்தும் கத்தின.
இதனால் கோட்டாளமும், அவரது மனைவி மற்றும் மகனும் எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக கோட்டாளம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார்.
அப்போது ஆடுகளை திருடி சென்றவர்கள் காமராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சாமுவேல் (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (22) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.






