search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fight"

    வாணியம்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள மதனஞ்சேரி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் இன்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ராணிப்பேட்டை அடுத்த கல்மேல்குப்பம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் கலெக்டரிடமும் மனு கொடுத்து உள்ளனர்.

    ஆனால் மனுவின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு கல்புத்தூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இலக்குவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை இருகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்கள் அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தாண்டி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அங்கு சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல மாதங்கள் ஆன பிறகும் அந்த சுரங்கப்பாதை இன்னும் திறக்கப்படவில்லை.

    எனவே பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ரெயில்வே சுரங்கப்பாதையை உடனே திறக்கக்கோரி இன்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு வந்து சுரங்கப்பாதையை உடனே திறக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவ, மாணவிகள் கூறினர். #tamilnews
    திருமங்கலம் அருகே கோஷ்டி மோதலில் ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மேலஉறப்பனூரைச் சேர்ந்தவர் தவராஜ். இவருக்கு சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி என 3 மகன்கள் உள்ளனர். இதில் சிவக்குமார், சிவராமன் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமனுக்கு திருமணம் முடிந்தது. சம்பவத்தன்று பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சிவராமன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

    அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பொது பாதை பிரச்சினையில் உள்ளது என கூறி முள்வைத்து அடைத்துவிட்டார். இதனால் தவராஜ் தரப்புக்கும், முருகேசன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது.

    இருதரப்பினரும் கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் சந்தோசம், அக்னீஸ்வரி, சிவக்குமார், தவராஜ், செல்வி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் தவராஜின் மகன்கள் சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி, உறவினர் காசிராஜன், மற்றொரு தரப்பை சேர்ந்த சந்தோசம், அக்னீஸ்வரி, முருகேசன் உள்பட 20 பேர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ராணுவ வீரர்களான சிவராமன், சிவக் குமார், காசிராஜன், மூர்த்தி மற்றும் முருகேசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடைமடைக்கு காவிரி தண்ணீர் வராததை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக வந்த அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #CauveryWater #Kadamadai
    திருச்சி:

    கர்நாடகாவில் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பி உள்ளது.

    அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

    காவிரி, கொள்ளிடம் ஆறுகள் திருச்சி மாவட்டத்தின் வழியாகவே சீறிப்பாய்ந்து சென்றாலும் இந்த ஆறுகளால் திருச்சி மாவட்டம் பாசன வசதி பெறுவதில்லை. கரூர் கதவணையில் இருந்து திருச்சி முக்கொம்பு வரை காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் 17 கிளை வாய்க்கால்கள் மூலம் மட்டுமே திருச்சி மாவட்டம் பாசன வசதி பெற்று வருகிறது.


    உய்யக்கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி, பெருவளை, அய்யன் வாய்க்கால்கள் இவற்றில் முக்கியமானவையாகும். திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் வாய்க்கால் பாசனம் மூலம் நெல், வாழை, கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாய்க்கால்களின் மூலம் பல ஏரி, குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என விவசாயிகள் குறை கூறி வந்தனர்.

    இந்நிலையில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று திருச்சி அருகே உள்ள தாயனூர், புங்கனூர், நவலூர் குட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.

    அவர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட பொறியாளர் கணேசன், உதவி செயற் பொறியாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் தாசில்தார் கனக மாணிக்கம் உள்பட அதிகாரிகளும் சென்று இருந்தனர்.

    தாயனூர் சந்தை அருகே அமைச்சர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி பழைய கட்டளை வாய்க்காலை பார்வையிட்டனர். இந்த வாய்க்காலில் தண்ணீர் பெயரளவிற்கு தான் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டு மாயனூரில் இருந்து பழைய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் கடைமடை பகுதியான இங்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை.

    அதிகாரிகள் வருகிறார்கள் என்பதால் இன்று (நேற்று) தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி சாகுபடி பணியை தொடங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அமைச்சர்கள் உங்களுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான் நேரில் வந்துள்ளோம் என்றார்கள். ஆனாலும் விவசாயிகள் சமாதானம் அடையவில்லை. மாயனூரில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டாலும் இங்கு இப்படித்தான் வந்து சேரும். தலைப்பு பகுதியான நச்சலூரில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்கால் நீரை திருடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம் என ஒரு விவசாயி ஆவேசமாக பேசினார்.

    அப்போது கலெக்டர் ராசாமணி உங்கள் கோரிக்கையை நேரில் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக தான் அமைச்சர்கள் நேரில் வந்து இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள், அதனை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்த பின்னரும் பஸ்சை மறிப்போம் என்றால் எப்படி? நீங்கள் எத்தனை மறியல் போராட்டம் நடத்தினாலும் அதனை சமாளிக்க நான் தயார் என்று சவால் விடும் வகையில் பதில் அளித்தார்.

    விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பிரமுகர்கள், போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அரியாறு தடுப்பணை, பாப்பான்குளம், நவலூர் குட்டப்பட்டு, புங்கனூர் குளம், ஆகியவற்றையும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தபடி செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #CauveryWater #Kadamadai
    பாலக்கோடு அருகே கணவர் குடித்துவிட்டு தகராறு செய்வதால், மனைவேதனையில் 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து பெண் தற்கொலை செய்து கெண்டார்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னகவுண்டன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், காய்கறி வியாபாரி.

    இவரது மனைவி ஜோதி (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஷாலினி(13), யோகஸ்ரீ(9) என்ற 2 குழந்தைகள் உள்ளன. கோவிந்தராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

    நேற்றும் இதேபோல குடித்து விட்டு வந்து தகராறு செய்தாதால் மனமுடைந்த ஜோதி, தோட்டத்துக்கு அடிக்க உதவும் பூச்சி மருந்து எடுத்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து போனார்.

    2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குளங்களுக்கு காவிரி நீர் செல்லும் நீர்வழிப் பாதையான பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராமமக்கள் தண்ணீரின்றி அவதியுற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

    கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பண்ருட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர வடிவேல். இவர் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

    சுந்தர வடிவேலும், சதாசிவமும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுப்பேட்டை அருகே உள்ள தொரப்பாடி மாரியம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவின்போது சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது புதுப்பேட்டை போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் சுந்தர வடிவேலுக்கும், சதாசிவத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்பு 2 பிரிவினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் அண்ணன் ராஜாராமின் வீடு சூறையாடப்பட்டது.

    அதுபோல சுந்தர வடிவேலின் தம்பி வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது. சுந்தர வடிவேலுவின் ஆதரவாளர்கள் சதாசிவத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இந்த மோதலில் சுந்தர வடிவேலின் மகன் ராஜ்குமார் தாக்கப்பட்டார்.

    படுகாயம் அடைந்த ராஜ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர்.

    இந்த மோதல் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் சுந்தர வடிவேல், தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதாசிவம் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

    தி.மு.க.வினரிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதி கொண்டதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் எல்லை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரெங்கநாதன் மற்றும் தர்மலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த சிலர் பாட்டில்கள், கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
    பெரம்பலூர்:

    சென்னை சூளைமேடு பகுதியில் பிரபல ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரவுடி பினு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகி தற்போது தலைமறைவாகி விட்டார்.

    அதேபோல் பெரம்பலூரில் பார்ட்டி கொண்டாடிய ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் லாட்ஜ் உள்ளது. இந்த ஓட்டலில் கே.கே. நகர் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் பார்ட்டி நடத்துவதற்கு நேற்று அறை எடுத்துள்ளனர். அங்கு பிரியாணி விருந்துடன் மது குடித்த அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதனால், ஓட்டல் மாடியில் கிடந்த பழைய பொருட்கள் மற்றும் கற்களை கொண்டு, சுற்றி இருந்த வீடுகளின் மீது சரமாரியாக வீசியுள்ளனர். தொடர்ந்து, உருட்டு கட்டை, கற்களை கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    நள்ளிரவு நேரத்தில் நடந்த சம்பவத்தால் பயந்து போன பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, அவர்களையும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

    இதில் லாட்ஜ் அருகேயுள்ள வீட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்த ரவுடிகள் போலீசார் வருவதற்குள் தப்பியோடிவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் முகாம் அலுவலகத்தை (வீடு) முற்றுகையிட்டு, அதே இடத்தில் திருச்சியில் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இரவோடு இரவாக கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் கே.கே.நகர், நியூகாலணி உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவு பதட்டமான சூழல் நிலவியது.
    நெல்லையில், கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் தலையில் வெட்டு காயமடைந்த மகனை பார்த்த தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மாவடியை சேர்ந்தவர் சண்முகத்தாய்(வயது 56). இவரது மகன் ராமர்பாண்டியன்(26). இவர் நேற்று அப்பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்றார்.

    அப்போது இவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் கல்லால் ராமர் பாண்டியனை தாக்கினர். இதில் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தனது மகன் தலையில் ரத்தத்தை பார்த்த சண்முகத்தாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். ராமர்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ராஜபாளையத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் தெக்கூரைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது38). இவரது கணவர் குமார். செங்கோட்டை ரெயில்வேயில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் சுவிதா என்ற பெண் குழந்தை இருந்தது. 3 பேரும் செங்கோட்டையில் வசித்து வந்தனர்.

    சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சண்முகத்தாய் கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தெக்கூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று மாலையில் சண்முகத்தாயையும், அவரது குழந்தையையும் காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமான விவசாய கிணற்றில் தாயும், மகளும் பிணமாக மிதந்தனர். குடும்ப தகராறில் சண்முகத்தாய் மனமுடைந்து கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
    ×