search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை
    X

    ராஜபாளையத்தில் குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை

    ராஜபாளையத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் தெக்கூரைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது38). இவரது கணவர் குமார். செங்கோட்டை ரெயில்வேயில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 மாதத்தில் சுவிதா என்ற பெண் குழந்தை இருந்தது. 3 பேரும் செங்கோட்டையில் வசித்து வந்தனர்.

    சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் சண்முகத்தாய் கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தெக்கூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    நேற்று மாலையில் சண்முகத்தாயையும், அவரது குழந்தையையும் காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமான விவசாய கிணற்றில் தாயும், மகளும் பிணமாக மிதந்தனர். குடும்ப தகராறில் சண்முகத்தாய் மனமுடைந்து கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
    Next Story
    ×