search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement Department"

    • அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
    • சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்த சூழலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்றுவிட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகாரை தமிழக போலீசார் மறுத்தனர்.

    இந்நிலையில், அங்கிட் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.

    மேலும், சம்மனில் விரிவான தகவல் இல்லை எனவும் குறிப்பாக யார் அனுப்பிய சம்மன்? எனவும் எங்களுக்கு தெரியவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    அந்த சம்மனில் செவ்வாய்கிழமை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    • கெஜ்ரிவால் நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றும் ஆஜராகவில்லை.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதற்கிடையே நேற்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது முறையாக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    • கெஜ்ரிவால் இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
    • 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. 

    இதற்கிடையே இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. இன்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அளித்துள்ளார்.

    அதில், "புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது. எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் 5 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை புரசைவாக்கத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 பிளாக்குகள் உள்ளன. இதில் 4-வது பிளாக்கில் உள்ள அமித் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று காலையில் அமித் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள்.

    அமித், அரசு ஒப்பந்தங்களுக்கு மின்சார சாதனங்களை வினியோகித்து வந்தார். இவர் சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இவர் பொதுப்பணித் துறைக்கு மின்சார பொருட்களை மொத்தமாக சப்ளை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கெனவே கிடைத்த தகவலில் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தற்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அமித் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள ஜெயின் வில்லா அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மகேந்திரா பி.ஜெயின் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மகேந்திரா பி.ஜெயினின் தம்பி ரமேஷ்குமார் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது பிளாக், 3-வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அண்ணன்- தம்பி இருவரும் சலீம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இங்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.

    இதேபோல் சென்னையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினாகள். இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை அண்ணாநகரில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    • நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ந் தேதி அறிவித்தது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்கும் விதமாக மாநில முழுவதும் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 713 செல்போன்கள், 86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதிகபட்சமாக நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலின் மதிப்பு ரூ.35.09 கோடியாகும். இலவச பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.81.18 கோடி ஆகும். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அக்டோபர் 9-ந் தேதி முதல் நேற்று வரை ரூ 260 கோடி மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை மொத்தம் ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.
    • நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசின் நீர்வளத்துறை நேரடியாக செய்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மணல் விற்பனையை செய்கிறது.

    ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000-க்கும் மணலை யார்டுக்கும் கொண்டு வந்து ஒப்பந்ததாரர் வழங்க ரூ.1680 என மொத்தம் ரூ.2680 வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந் தேதி சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை முழுமையாக நடைபெறவில்லை. ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. யார்டுகளில் உள்ள மணல் மட்டும் மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுவரையில் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்த அளவு, அதற்கான பில் போன்றவற்றை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். அம லாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.

    • அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'அசிம்தாஸ் என்ற இடைத்தரகா், ராய்பூரில் ரூ.5.39 கோடி ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது, தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் அனுப்பப்பட்ட பணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையும் அவரது கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வும் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகேல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்துள்ளன. அவருக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகாதேவ் சூதாட்டச் செயலியால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணம், பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பகிரப்பட்டதாக அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில், செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உள்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.15.59 கோடியை சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • முறையாக பில்கள் போடவில்லை என புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என புகார்கள் எழுந்தவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திடீரென கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.

    மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்ட வர்களிடம் விசாரணை நடத்தினர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மணல் அள்ளும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.

    வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.
    • அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மேலாளர் பி.கே.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் பணியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு 12.12.2012 அன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.

    அதற்குப் பிறகு 12ஏஏ, 80ஜி, சிஎஸ்.ஆர். அங்கீகாரமும் முறையாகப் பெறப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கிக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அரசு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது.

    அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும், அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு- செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம்.

    அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் 27.05.2023 அன்று வெளிவந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்ப டுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப் போல், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.

    மேலும் அமலாக்கத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது.

    உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    • சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.

    மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூத்துக்குடியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    தூத்துக்குடி:

    ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் வருமானவரி அலுவலகம் முன்பு 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் மூவர்ண கொடியேந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ்,எடிண்டா, கற்பககனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ்,

    வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன்துரை,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,

    மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் கோபால், சேவியர் மிஷியர், குமாரமுருகேசன், அபுதாங்கீர், மைக்கேல், சின்னகாளை, மைக்கேல், நிர்மல் கிறிஸ்டோபர், பிரபாகர், கனியம்மாள், பெட்டின்,அந்தோணிசாமி, ஜான்சன், சசிபர்னாந்து, நீயூமன், கிருஷ்ணன், சுந்தர்ராஜன்,

    ஜெயகிங்ஸ்டன், மகாலிங்கம், ராஜரத்தினம், சேகர், சீனியப்பன், மகேந்திரன், மெர்லின், பாக்கியராஜ், ஐ.என்.டி.யூ.சி. ராஜா, சாந்தி, வால்டர், யூஜின், பெருமாள்,கனகராஜ்,கமலேசன், சுப்பையா, பட்டு, நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    ×