மீண்டும் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

கெஜ்ரிவால் நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றும் ஆஜராகவில்லை.
மீண்டும் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
Published on

புதுடெல்லி:

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதற்கிடையே நேற்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. 10 நாள் தியானத்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com