search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employment"

    • பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும் என விருதுநகர் கலெக்டர் பேசினார்.
    • வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 4.0 தர தொழிற்நுட்ப மையத்தின் மூலம் செயல்படும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலை யங்களிலும் 2023-ம் ஆண்டிற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

    இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை அதிக ரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலை யத்தில் நமது சகோதரிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.

    இந்நிகழ்ச்சியில் நவீன தொழில் பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில்நுட்ப மையங்களில் ஆய்வகங்கள், பணி மனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவி கள், அவர்களின் பெற்றோர் கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    தரமான கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொழிற் பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பு களை காட்டிலும், தொழிற் பயிற்சி மையங்கள் தொழில் பயின்றோர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    பெண்கள் தொழிற் பயிற்சி பயில்வதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று, தங்களுடைய பொருளா தாரத்தை உயர்த்துவதன் மூலம், தங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
    • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர், சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் ஆய்வாளர் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் விரைவில் நடத்த இருக்கின்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2 மற்றும் குரூப் -4 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான மாதிரி தேர்வு கள் வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் வினாக்களுக்கு மாதிரி தேர்வு எழுத விரும்பும் போட்டித் தேர்வாளர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள போட்டித்தேர்வு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19-ந்தேதி தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இப்பள்ளி வளாகத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை ஆய்வு செய்தார். முகாமிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்புத்துறை உதவி உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்தார். மேலும். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் தனியார் நிறுவனங்கள் அமைக்க வேண்டிய அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    இந்த ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்யராஜ், தாசில்தார் அந்தோணிசாமி, நகராட்சி கமிஷனர் பானுமதி, நகரமன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (11-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இத்தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்த குதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்டமாற்று த்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புறவாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனா ளிகளு க்கான சிறப்புதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இதில்தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்த குதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி யில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமையில் தலைஞாயிறு பஸ் நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கன கராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, மூத்த உறுப்பினர்கள் ஞானசி காமணி, மணி மேகலை, இளைஞர் காங்கி ரஸ் கார்த்தி ஹரி உள்ளிட்ட தொண்ட ர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழு த்திட்டனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கூறுகையில்:-

    தலைஞாயிறு பேரூராட்சி க்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் 5 ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்க ளுக்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்களும் வழங்கப்படவுள்ளது.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடா்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

    • வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாத மும் 3 அல்லது 4-ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இம்மாதம் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளா கத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும்; வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள வர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோ ருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழி–காட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். செயலாளர் அந்தோணிசாமி, துணை முதல்வர் சுந்தரராஜ் சிறப்புரையாற்றினர்.

    மதுரை மண்டல வேலை–வாய்ப்பு மற்றும் பயிற்சி மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து–ரைத்தார். தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தின் துணை இயக்குனர் சண்முக சுந்தர், குடிமைப்பணி தேர் வுகள் குறித்து விளக்கி–னார்.

    மதுரை மாவட்ட வேலை–வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் நடத் தும் இலவச பயிற்சி வகுப்பின் அறிவுரையாளர் மலைச்சாமி பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சிறார் நீதி வாரிய உறுப்பினர் பாண்டி–யராஜன் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முடி–வில் அருள் ஆனந்தர் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புக் குழு துணை தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

    • வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாமிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

    கல்லூரியின் முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பினை பெற தற்போதே முயற்சிகள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆன்றணி இம்முகாமில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கினார். நெல்லை மாவட்ட உதவி வேலை வாய்ப்பு அலுவலர் அருண், மாணவிகள் போ ட்டித் தேர்வில் ஆர்வ முடன் பங்கேற்பதற்கு ஏதுவாக சிறப்புரை ஆற்றினார்.

    நிறுவனத்தலைவர், மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளையும் செய்வதாகவும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் வாங்கி வைப்பதாகவும் உறுதியளித்தார். வணிக மேலாண்மையியல் பேராசிரி யை ரஞ்சிதம் நன்றி கூறினார்.

    • நாளை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்படுகின்றன.

    இதன்படி, நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியானோ ரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலை யளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×