search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ள பள்ளியில் கலெக்டர் ஆய்வு
    X

    விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ள பள்ளியில் கலெக்டர் ஆய்வு

    • தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19-ந்தேதி தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இப்பள்ளி வளாகத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை ஆய்வு செய்தார். முகாமிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்புத்துறை உதவி உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்தார். மேலும். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் தனியார் நிறுவனங்கள் அமைக்க வேண்டிய அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    இந்த ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்யராஜ், தாசில்தார் அந்தோணிசாமி, நகராட்சி கமிஷனர் பானுமதி, நகரமன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×