அவிநாசியில் வருகிற ஆகஸ்ட் 5- ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர், ஆக.2-

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்க ளுக்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்களும் வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடா்புகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com