search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postponement"

    • மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 2024ம் ஆண்டு பிறந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்ச்சியாக அவரது திருச்சி சுற்றுப்பயணம் அமைந்தது.

    இதையடுத்து மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தமிழகத்துக்கு 2-வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து கேலோ இந்தியா போட்டியை சென்னையில் தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் அறிவித்துள்ளனர்.

    திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையை திறந்து வைக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தெரிவித்தார்.

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
    • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

    இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

    17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர். அப்போது சோனங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

    . மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16- ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 -ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் பரபரப்பு அடங்கி அமைதி யான நிலை தொடர்ந்தது. 

    • ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது.
    • மாரியம்மன் கோவில் ரோட்டில் அல்லிக்கண்மாய் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக 90 வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி மாரியம்மன் கோவில் ரோட்டில் அல்லிக்கண்மாய் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக 90 வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர்.

    இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அல்லிக்கண்மாய் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வருவாய்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

    இவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நகர்புற ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுத்தனர். அங்கு போக்குவரத்து, பள்ளி வசதியில்லை என்பதால் நகர் பகுதியில் அரசு இடத்தை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன், டி.எஸ்பி. ராஜா, நகராட்சி, பொது ப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஆக்கிரமி ப்பு அகற்றும் பணி நடந்தது.

    அப்போது சிலர் அவர்களாகவே வீடுகளை காலி செய்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது பா.ஜனதா ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், பொருளாளர் தரணி முருகேசன் ஆகியோர் ஆர்டி.ஓ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆடி மாதம் என்பதால் மக்கள் வேறு வீடு பார்க்க சிரமப்படுகின்றனர். எனவே அடுத்த மாதம் வரை வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து தற்காலிகமாக ஆக்கிமிரப்பு அகற்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    சென்னை:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

    இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதே போன்ற பருவமழை காலங்களில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடந்து இருப்பதாகவும், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.



    இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலைதான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருந்தது.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முறியடிக்கப்பட்டது. இதை மனதில் கொண்டே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

    ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது.

    தமிழக இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    ×