என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 99375
நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"
55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது.
புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார். 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
தமது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமி, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், தமது ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் தமது டுவிட்டர் பதிவில் இடைத்தேர்தலில் வாக்குகள் மூலம் நீங்கள் (வாக்காளர்கள்) கொடுத்த அன்பு மற்றும் ஆசீர்வாதத்தால் என் இதயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டது, நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் புஷ்கர்சிங் தாமி புதிய சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக பாராட்டுவதாகவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...
கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை- பினராயி விஜயன்
காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
