search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Meeting"

    • தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
    • தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார். கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா க.மனோகரன், சாமளாபுரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் ராமசாமி , தி.மு.க. சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் தியாகராஜன்.

    சூலூர் தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி வினோஜ் குமார், இளைஞர் அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ரங்கசாமி, சன்முகம்,இருதயசாமி,கார்த்தி, ஆறுமுகம், மற்றும் வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு இச்சிப்பட்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பல்லடம் கிழக்கு ஒன்றியதி.மு.க.அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கொ.ம.தே.க. மாவட்டசெயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன், காங்கிரஸ் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி,

    இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மதிமுக. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக் நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. #anitharadhakrishnanmla
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாசலம் தலைமை தாங்குகிறார். 

    கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #anitharadhakrishnanmla
    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க. பதில் அளித்துள்ளது. #DMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட கட்- அவுட்டுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கான ஆதாரமாக வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

    இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.


    சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

    வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

    அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #TNMinister #Jayakumar
    குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுரைபடி குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    குளச்சல் நகரம், தக்கலை ஒன்றியம், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், தோவாளை ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியங்களில் இந்த கூட்டம் நடக்கிறது. தலைமை கழகத்தால்  நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, கிரி ஆகி யோர இந்த கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்ட ஏற்பாடுகளை செய்து இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #DMK #MKStalin
    சென்னை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் வீதம் 40 தொகுதிக்கு 80 நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் சில மாவட்டச் செயலாளர்கள் சீனியர்களாக இருப்பதால் தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ளவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து விடக்கூடாது என்பதில் கட்சி மேலிடம் கவனமாக உள்ளது.

    இதன் காரணமாக தொகுதி பொறுப்பாளர்கள்- மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.

    மாவட்டக் கழக செயலாளர்கள் பொன்முடி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சுந்தர், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர் உள்ளிட்ட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

    இவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்களான பல்லாவரம் இ.கருணாநிதி , தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், சி.வி. எம்.பி.எழிலரசன், டி.ஆர். பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்.முத்துராமலிங்கம், கடலூர் இள.புகழேந்தி, மு.சண்முகம், காசிமுத்து மாணிக்கம், ஜின்னா, கே.பி.பி.சாமி, தாயகம் கவி, மஸ்தான், பிச்சாண்டி, சுகவனம், பொங்கலூர் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பூங்கோதை, ஆலடி அருணா, கருப்பசாமி பாண்டியன், ஜோயல், மைதீன்கான் உள்பட 80 பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாவட்டச் செயலாளர்களின் அணுகுமுறை குறித்து மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் விரிவாக பேசினார்.

    மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். #DMK #MKStalin
    நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், அவைத்தலைவர் நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் மாநாடு தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து சந்திரசேகரராவ், சமீபத்தில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது மாநில கட்சிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது தொடர்பான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நேரிலும் கடிதம் வழங்கப்பட உள்ளது.

    ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்குமாறு ராகுல்காந்தியை திருமாவளவன் நேரில் அழைத்த நிலையில், மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு தனியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. 
    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் மற்றும் கீரனூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    பெரம்லூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துக்கண்ணு, கோகிலா சேகர், கோபால், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஊராட்சி செயலாளர் சாமி துரை வரவேற்றார். மாநில மாணவரணி இணைச் செயலாளர் கோவி.செழியன், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செய லாளர் துரைசாமி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் வல்லபன், மாவட்ட துணைச் செய லாளர்கள் ராஜ்குமார், பாஸ்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். முடிவில் ஒன்றிய  இளை ஞரணி அமைப்பாளர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிள்ளுக் கோட்டை மற்றும் கிள்ளனுர் தி.மு.க  சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  குன்றாண்டார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர்  சேட்டு தலைமை தாங்கினார். புதுக் கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பேசினார். 

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், ஆரணிமாலா, மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், செல்வம், கீரனூர் நகர பொறுப்பாளர் வக்கீல் அண்ணாதுரை, குளத்தூர் மணிராஜன், பேராசிரியர் குறிஞ்சி வாணன் ஆகியோர் பேசினர். முடிவில் தி.மு.க தகவல் தொழில்நுட்பதுறை ஜெயராஜ் நன்றி கூறினார்.
    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மகளிரணி மாவட்டச் செயலாளர் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:  

    மகளிரயினர் கட்சிப் பணிகள், சேவைகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாய்மார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் தி.மு.க வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். 

    கூட்டத்தில், மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியச்  செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெயர் பலகை திறந்து, கட்சி கொடியேற்றி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
    ×