search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "araja"

    • கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    15 அசையா சொத்துக்களும் கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை.

    சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota
    தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார். #ARaja #DMK
    காரைக்குடி:

    காரைக்குடி பாண்டியன் திடலில் 21-ம் ஆண்டு கலைஞர் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச்சங்க புலவர் தொழில் அதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார். சங்க நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா, நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆ.ராசா தனது சிறப்புரையில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கலைஞரின் அரசியலோடு இலக்கியமும் எப்போதும் இணைந்தே இருக்கும். தந்தை பெரியார், கலைஞரின் இலக்கிய ஆற்றலை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகாலமாக தனது ஆளுமையை நிலை நாட்டி வருபவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் நிறைவேற்ற தயங்கிய சட்டங்களை துணிச்சலாக நிறைவேற்றியவர் கருணாநிதி.

    தற்போதுள்ள மாநில அரசு ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், குட்கா ஊழல், சமீபத்தில் ஆளுவோருக்கு வேண்டியவர்களான காண்டிராக்டர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். மத்தியில் மதவெறி கொண்ட ஆட்சியும், மாநிலத்தில் மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #ARaja #DMK
    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மகளிரணி மாவட்டச் செயலாளர் மகாதேவி ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:  

    மகளிரயினர் கட்சிப் பணிகள், சேவைகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாய்மார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மையான இடங்களில் தி.மு.க வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். 

    கூட்டத்தில், மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் பிரபாகரன், ஒன்றியச்  செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கெண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெயர் பலகை திறந்து, கட்சி கொடியேற்றி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
    ×