search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Jayakumar"

    • அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
    • பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்வதாக தகவல் வெளியானது.

    அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும்.

    அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும்.

    பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்து ஜீரோ ஆகிவிட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    டெல்லியில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பதவி என்பது எங்களுக்கு இரண்டாம் பட்சம். மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

    மத்திய மந்திரி பதவிக்கு அ.தி.மு.க.வில் 2 பேர் இடையே போட்டி என்ற அனுமான கேள்விக்கு பதில் அளிக்க இயலாது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை சந்தர்ப்பவாதி என்பது தெளிவாகிறது. இன்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்திப்பது ஆதாயத்திற்கு. குளம் தேடி பறந்து வல்லமை படைக்கும் கொக்கு என்பது தி.மு.க.விற்கு பொருந்தும்.

    நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த ஸ்டாலின் பதிலுக்கு, நானும் சொல்கிறேன், ‘பொறுத்து இருந்து பாருங்கள்’. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய காட்சியை அவர்கள் பார்ப்பார்கள். நிச்சயமாக நதி நீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்.

    கமலை பொருத்த வரை, பதவி கொடுத்தால் நான் செயல்படுவேன். இல்லை என்றால் எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகளில் ஈடுபடுவேன் என்பதுதான். இது தான் அவர் அரசியல். தமிழகத்திற்கு வருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது.



    தினகரனை பொருத்தவரை, கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு, கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தார், ஆனால் அந்த ஹீரோ, ஜீரோ ஆகிவிட்டார். பூஜ்ஜியம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

    காவிரி நீர் வழங்குவது நீதிமன்ற உத்தரவு. அதை முறைப்படி கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.

    தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.


    மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜூன் 3-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் கூறி இருந்தார். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று நான் கூறி இருந்தேன்.

    துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

    அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?

    தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

    எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.

    பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதிய வரலாற்று ஆசிரியர் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என்று கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
    சென்னை:

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    அவரின் கருத்து இந்திய அரசியலில் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் கமல் தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார்.

    ‘இந்து’ என்ற சொல் முகலாயர் காலத்திற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை ஆங்கிலேயர் வழிமொழிந்ததாகவும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் மதமாக பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளன. வரலாற்று உண்மையைத் தான் கமல் கூறியுள்ளார் என்று ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கமல் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-


    ஏற்கனவே கணக்கு வாத்தியார் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தப்பு தப்பா கணக்கை கூட்டல் செய்பவர். இப்போது அந்த வரிசையில் வரலாற்று ஆசிரியர் கமலும் நமக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?

    மக்கள் முன்னேற்றம் பற்றி சிந்திப்பது தான் தலைவர்கள். அதை விட்டு உறுப்படியற்ற வேலைகளை ஸ்டாலினும், கமலும் செய்வது கேலி கூத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகர் கமலுக்கு திரைப்படத்திலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழ் மக்களின் விருப்பத்துக்காகவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 



    தமிழகத்தில் விஷ விதைகளை விதைத்து கமல் குளிர் காய நினைக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா?

    தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது. கமல் நடித்த படங்களிலும், அரசியலிலும் நாகரீகம் இல்லை. அ.ம.மு.க.வில் சேர்ந்தவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என தெரிவித்தார்.
    அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #AMMK #MinisterJayakumar

    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

    எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா பெயரை சொல்லி பிரசாரம் செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். #LokSabhaElections2019 #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை’, என்பதற்கேற்ப ஜெயலலிதாவை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறோம். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்ற பழமொழிக்கேற்ப மு.க.ஸ்டாலின் நடக்கவில்லை. ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று கருணாநிதி கூறினார். அவர் ‘கூடா நட்பு’ என்ற சொன்ன காங்கிரசுடனேயே, மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார். இது சந்தர்ப்பவாதம்.



    ‘தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டுபிடிப்போம்’, என்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு மானங்கெட்ட செயல்.

    எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றபோது, ‘எம்.ஜி.ஆர். உயிருடன் வந்தால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்துவிடுவோம்’, என்று கூறி கருணாநிதி மக்களிடம் ஓட்டு கேட்டார். அவரது நாடகத்தை புரிந்துகொண்டு மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்தனர்.

    தந்தை எடுத்த ஆயுதத்தை மகனும் தற்போது எடுத்திருக்கிறார். பிரசாரத்தின்போது எங்கள் தலைவியை பற்றி பேசி ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது? தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்டத்திலேயே இல்லாத தி.மு.க. இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    அரசியல் களத்தில் உண்மையான போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். அ.ம.மு.க. ஆட்டத்திலேயே கிடையாது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலை மட்டுமே வீசுகிறது. வேறு அலை கிடையாது. இந்த அலையில் சிக்கி எதிரிகள் மாண்டு போவார்கள்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. இந்தளவு நிலைமை மோசமானதை அவரை வீட்டில் இருந்து பார்த்துக்கொண்ட சசிகலா குடும்பத்தினர் கண்டுகொள்ளாதது ஏன்?, அவர்கள் என்ன செய்தார்கள்? எனவே அந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் அந்த குடும்பத்துக்கு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #MinisterJayakumar

    1,500 ரூபாய் உதவித்தொகை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரொக்கமாக பணம் எடுத்து செல்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னையில் மட்டும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 30 பேரும், சட்டசபை இடைத்தேர்தலில் 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்ற 21,999 பேரில் 18 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 32 பேரின் துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


    அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தால் ரூ.1,500 வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளரிடம் கூறியதாக தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். அவரது அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் இருந்து இன்னும் எங்களுக்கு தகவல் வரவில்லை. சூலூர் தொகுதி காலியிடம் என்று தகவல் வந்தால்தான் தேர்தல்கமி‌ஷனுக்கு அதை நாங்கள் தெரிவிப்போம். அதன்பிறகுதான் அங்கு தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #MinisterJayakumar #PollachiAbuseCase
    சென்னை:

    செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
     
    அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. விரைவில் அதிமுக தலைமை பட்டியலை வெளியிடும். அதிமுகவில் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துத் தந்தது போல் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

    பொள்ளாச்சி கொடூரம் மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.  உச்சபட்ச தண்டனை தரவேண்டும். பொள்ளாச்சி விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்க விரும்புகிறார்கள். அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது.



    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #PollachiAbuseCase
    அதிமுக எம்.பி.க்களால் பயனில்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterJayakumar #PremalathaVijayakanth
    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் பற்றி பிரேமலதா விமர்சனம் செய்ததற்கும் பதில் அளித்தார்.


    யாராக இருந்தாலும் ஒருமையில் பேசக்கூடாது. பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம்.

    37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் பயன் இல்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது. மேகதாது பிரச்சனையில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

    தே.மு.தி.க. மீது நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. யாரையும் கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதுதான் எங்கள் கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #PremalathaVijayakanth
    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #DMDK
    சென்னை:

    கோயம்பேட்டில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது.

    பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. தி.மு.க.-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தே.மு.தி.க. குறித்து சொன்ன கருத்து கட்சி கருத்து அல்ல. இதற்கும் பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #DMDK

    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    சேலம்:

    சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?

    பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே?


    ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    ×