என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
    • முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.

    காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.

    முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?

    ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.

    சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.

    சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.

    ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.

    நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.

    திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.

    தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதலமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார். டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான்.

    அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம்.

    இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.

    தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார்.

    மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

    இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார்.

    அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.

    எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம் என்பார். 

    • சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
    • தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.

    தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
    • அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வீரவெற்றி பாண்டியன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய், திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட விமர்சனம். இருந்தாலும் அவர் தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் அல்ல, ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும், அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். தி.மு.க. அரசு முடிவுக்கு வந்துவிடும்.

    கூலிப்படை தான் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் நடக்கிறது. அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் தி.மு.க. கூட்டணியில் இருக்க போகிறார்களா, இல்லையா என்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது. அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கட்டிஷனில் இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமா என்ற கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்ஸன் வந்தாலும் கவலை இல்லை, தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை, இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் என்றார். 

    • தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழக முழுவதும் ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அ.தி.மு.க சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    இதுவரை தமிழக முழுவதும் 181 தொகுதிகளில் அவர் பிரசாரம் முடித்துள்ளார். இந்நிலையில் 182-வது தொகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அந்தப் பகுதியில் தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கும் போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசி வருகிறார். இதனால் நாளை நடைபெறும் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
    • FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா?

    அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?

    அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க...

    வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், புரட்சிக் கலைஞர் விஜய காந்தி ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu....

    அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu...

    இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

    "தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது உத்தரவின்படி நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்...!!

    சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

    கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதுபோல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

    உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர்தானே நீங்கள்?

    எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!

    எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்!

    நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள்தான்!

    நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத்தான்!

    "அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின்போது, 41 பேர் மரித்தபோது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடுதான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

    அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?

    கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற நபர் உயிரிழந்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி அளித்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அதிமுக கட்சியைச் சேரந்த கோவை சத்யன், "தவெக கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி" என விமர்சித்துள்ளார்.

    கரூரில் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் எற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

    இந்த நிலையில் தற்போது மற்றொரு கூட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    • முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
    • தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.

    2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?

    செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை "விடியா ஆட்சி வீட்டு பில்லே சாட்சி" என்று வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?

    இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே. யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.

    "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி, 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.

    தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று ஒவ்வொரு சட்டமன்ற தொகு தியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அம்பத்தூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று ஒவ்வொரு சட்டமன்ற தொகு தியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி வருகிற 21-ந்தேதி(சனிக்கிழமை) அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.அலெக் சாண்டர் செய்து வருகிறார். இது தொடர்பாக அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார்.

    • ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
    • மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' என்று மத்திய அரசு மாற்றியது. இது சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போதுவரை மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.  இந்நிலையில் காந்தியாக இருந்தால் என்ன, ராமராக இருந்தால் என்ன பெயரா முக்கியம், வேலைதான் முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

    விழுப்புரத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய அவர், 

    "திமுக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிவிட்டது எனக்கூறி வருகிறது. வேலையை நிறுத்திவிட்டார்கள் எனக்கூறுகிறார்கள். என்ன பெயராக இருந்தால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்கு என்ன? எங்களுக்கு சோறு கிடைத்தால் போதும். காந்தி பெயரை வைத்தால் என்ன? ராமர் பெயரை வைத்தால் என்ன? திட்டம்தான் முக்கியம். பெயரில் என்ன இருக்கிறது?

    காந்திமேல் ரொம்ப பாசம். இந்திரா காந்தியை கல்லால் அடித்தார்கள். ஆனால் காந்திமேல் பாசம் வந்துள்ளது திமுகவுக்கு. எங்களுக்கு தேவை வேலை". எனப் பேசியுள்ளார்.  

    • தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    • தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளியில் மோடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி, தி.மு.க.விடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி விட்டார்.

    தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். அ.தி.மு.க.விடம் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆட்சியில் பங்கு மட்டுமில்லை. எதையுமே அ.தி.மு.க.விடம் நாங்கள் கேட்கப்போவதில்லை என்றார்.

    ×