search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
    X

    அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

    1,500 ரூபாய் உதவித்தொகை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரொக்கமாக பணம் எடுத்து செல்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னையில் மட்டும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 30 பேரும், சட்டசபை இடைத்தேர்தலில் 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்ற 21,999 பேரில் 18 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 32 பேரின் துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


    அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தால் ரூ.1,500 வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளரிடம் கூறியதாக தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். அவரது அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் இருந்து இன்னும் எங்களுக்கு தகவல் வரவில்லை. சூலூர் தொகுதி காலியிடம் என்று தகவல் வந்தால்தான் தேர்தல்கமி‌ஷனுக்கு அதை நாங்கள் தெரிவிப்போம். அதன்பிறகுதான் அங்கு தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    Next Story
    ×