என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்
  X

  முக ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #DMK #MKStalin
  சென்னை:

  வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பேர் வீதம் 40 தொகுதிக்கு 80 நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர்.

  ஒவ்வொரு தொகுதியிலும் சில மாவட்டச் செயலாளர்கள் சீனியர்களாக இருப்பதால் தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ளவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து விடக்கூடாது என்பதில் கட்சி மேலிடம் கவனமாக உள்ளது.

  இதன் காரணமாக தொகுதி பொறுப்பாளர்கள்- மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.

  மாவட்டக் கழக செயலாளர்கள் பொன்முடி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சுந்தர், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர் உள்ளிட்ட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

  இவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்களான பல்லாவரம் இ.கருணாநிதி , தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், சி.வி. எம்.பி.எழிலரசன், டி.ஆர். பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்.முத்துராமலிங்கம், கடலூர் இள.புகழேந்தி, மு.சண்முகம், காசிமுத்து மாணிக்கம், ஜின்னா, கே.பி.பி.சாமி, தாயகம் கவி, மஸ்தான், பிச்சாண்டி, சுகவனம், பொங்கலூர் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பூங்கோதை, ஆலடி அருணா, கருப்பசாமி பாண்டியன், ஜோயல், மைதீன்கான் உள்பட 80 பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாவட்டச் செயலாளர்களின் அணுகுமுறை குறித்து மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் விரிவாக பேசினார்.

  மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். #DMK #MKStalin
  Next Story
  ×