search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black money"

    நாட்டை விட்டு கருப்புப் பணம் வெளியேறுவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது என சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார். #blackmoney #SubramanianSwamy
    பனாஜி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோ, டீசல் விலை அதிகரிப்புக்கு இதுவே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், கோவாவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, கருப்புப் பணம் நாட்டை விட்டு ஒழிவதால் தான் ரூபாயின் மதிப்பு சரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

    உலகின் மிகவும் முன்னேறிய நாடாக அமெரிக்கா இருக்கும்வரை அமெரிக்கா டாலரின் மதிப்பு சக்திவாய்ந்ததாக, உயர்வடைந்து கொண்டுதான் இருக்கும். நாட்டில் இருந்து கருப்புப்பணமாக இந்திய ரூபாய் வெளியே சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு சரிகின்றது.

    இந்தியாவில் இருக்கும் பணத்தின் பெரும்தொகை கருப்புப் பணமாக உள்ளது. இந்த பணம் தற்போது நாட்டில் இருந்து வெளியே செல்கிறது. இப்படி, டாலருக்கு நிகராக மாற்றப்படும் ரூபாயின் மதிப்பு சரிவடையத்தான் செய்யும்.

    மிகவும் வளர்ந்த நாடு என்ற நிலையை அமெரிக்கா இழக்க நேரும்போது மற்ற நாடுகளின் பண மதிப்பு கூடும். அதுவரை சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதை தடுக்க இயலாது என்றும் சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டார். #Rupeeagainstdollar #blackmoney #SubramanianSwamy
    தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த இப்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

    தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.

    தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

    போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)

    தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.

    இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.

    எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.

    செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChiefElectionCommissioner #OPRawat
    கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல் உள்ளிட்ட 7 விஷயங்கள் பாவத்திற்கு சமமானது என்று கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தேவாப்பூர் பகுதியில் உள்ள இன்பசேவா சங்க பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    ஜவஹர்லால் நேருவும், பூமி தான இயக்க தலைவருமான வினோபாஜியும் நெருங்கிய நண்பர்கள். வயதில் இளையவரான நேரு அப்போது வினோபாஜியை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். வினோபாஜியின் கொள்கைப்படி இந்த சேவா சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

    என்னை பொறுத்தவரை 7 வி‌ஷயங்களை பாவமாக கருதுகிறேன். புகைபிடிப்பது, மதுஅருந்துவது, கருப்பு பணம் சேர்ப்பது, கொள்கையில்லா அரசியல், அறிவியலை அழிவுக்கு பயன்படுத்துதல், உழைப்பில்லாத செல்வம், தியாகம் இல்லாத மதவழிபாடு இவைகள்தான்.

    எந்த மதத்தினர் ஆனாலும் சரி, இரவு தூங்கும் முன்பு இந்துவாக இருந்தால் பகவத் கீதையையும், கிறிஸ்தவராக இருந்தால் பைபிளையும், முஸ்லிமாக இருந்தால் குரானையும் படித்து விட்டு தூங்க வேண்டும். இதன் மூலம் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மீகத்தில் ஊறி வரும் போது தவறுகள் செய்ய வாய்ப்பில்லை.

    காந்தி வாழ்நாள் முழுவதும் சைவத்தை கடைபிடித்தார். நானும் சைவத்தை பின்பற்றுகிறேன். அசாமில் கவர்னராக இருந்த போதும் சைவ உணவுகளையே சாப்பிட்டேன். ஆனால் இங்கு தமிழகத்திற்கு வரும் போது அது சாத்தியமில்லை என்றனர். ஆனால் இங்கு வந்த பிறகும் சைவத்தைதான் பின்பற்றுகிறேன்.

    ஜனாதிபதி, பிரதமர் யார் வந்தாலும் ராஜ்பவனில் சைவ சாப்பாடுதான். என்னை பொறுத்தவரை சாத்தியம் இல்லாதது எதுவுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம், கரூர் மாவட்டத்தில் மாதிரி கிராமத்தை தேர்ந்தெடுத்து திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்புங்கள். அதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த கிராமத்திற்கு தேவையான கட்டமைப்புகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

    அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமை நிலைய செயலாளர் ராஜகோபால், கீதா எம்.எல்.ஏ., இன்பசேவா சங்க தலைவர் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.


    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கரூருக்கு இன்று காலை வருகை தந்தார். அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர் னரை வரவேற்றனர்.

    இன்று மதியம் கரூர் விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்று மாலை 5 மணியளவில் மூக்கணாங்குறிச்சியில் உள்ள தடுப்பணை மற்றும் தனிநபர் இல்ல கழிவறையின் பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். இதைத் தொடர்ந்து வீரணாம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    அதன் பின்னர் 5.30 மணியளவில் கரூர் பஸ் நிலையத்திற்கு வந்து தூய்மை இந்தியா இயக்க திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மை பணியை மேற்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று விட்டு கரூரில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் கரூர் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கரூர் நகரமே கவர்னரின் வருகையால் பளிச்சென்று காணப்பட்டது. நகரின் எந்த பகுதியிலும் குப்பைகள் காணப்படவில்லை. #TNGovernor #BanwarilalPurohit
    வெளிநாட்டில் சேர்த்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டப்படாததால் நளினி சிதம்பரம் உள்பட 3 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. #NaliniChidambaram
    சென்னை:

    இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்துக்களின் விவரங்களை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது.

    இவர்கள் மீது வருமான வரித்துறை, கருப்பு பணம் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் அவரது மகன், மருமகள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த 3 பேரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில், கருப்புப் பணம் தடுப்புச்சட்ட வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மலர்விழி விசாரணையை அக்டோபர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #NaliniChidambaram
    கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வகையில் தினகரன் ஆங்காங்கே பொதுக்கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDinakaran #MinisterJayakumar
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மாநில அரசின் வருவாய் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதனை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு தான் ஜி.எஸ்.டி. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

    தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.30 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ரூ.30 ஆயிரம் கோடியை இங்கு செலவு செய்யலாம்? அந்த பணத்தை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏழை- எளிய மக்களுக்கு நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி செய்யலாம்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாம் ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.யாக மத்திய அரசு பெற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு எப்படி வருவாய் வரும்.

    மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. அதனை நண்பர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதை வாங்கி தந்தால் அவர் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

    தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார்.



    ஒரு பழமொழி சொல்வார்கள். “சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது”. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #MinisterJayakumar
    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை, எனவே பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #PMModi #Congress #DeMonetisation

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது.

    நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்துடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரூ.3 லட்சம் கோடி வரை கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது.

    செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் மத்திய அரசு திரும்பப் பெற்றது. அந்த வகையில் 99.3 சதவீத நோட்டுக்கள் திரும்பி வந்து விட்டன. இந்த தகவலை நேற்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வெளியிட்டது.

    இதன் மூலம் வெறும் .7 சதவீதம் ரூபாய் நோடடுக்களே திரும்பி வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

    பண மதிப்பு இழப்பு விவகாரம் பிசுபிசுத்து போய் விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

     


    ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் மத்திய அரசு என்ன சாதித்து இருக்கிறது? எந்த ஒரு சிறு பலனும் கிடைக்கவில்லை. மாறாக இந்திய பொருளாதா ரத்தில்தான் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ரூபாய் நோட்டு குழப்பத்தால் பொருளாதாரம் 1.5 சதவீதம் பின்தங்கி விட்டது.

    ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் முடக்கப்பட்டதால் சாமானிய மக்களும், தினசரி கூலியாட்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் 15 கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்தனர். பல நாட்கள் கையில் பணம் இல்லாமல் சாதாரண மக்கள் திணறிப் போனார்கள்.

    சில வாரங்களுக்கு அன்றாட கூலித்தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. சில லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் தடைபட்டன. ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்களுக்கு கிடைத்தது இதுதான்.

    பிரதமர் மோடி நினைத்தப்படி நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் தான் வங்கிகளுக்கு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள்.

    அந்த மதிப்புள்ள இந்திய பணம் நேபாளம், பூடான் நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம். அங்கு அவை அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றே நான் சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமென்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

     


    பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பிறகு 99.3 சதவீதம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் கருப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை என்று தானே அர்த்தம். இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி பொய் கூறி இருப்பது உறுதியாகி விட்டது.

    ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், சில தொழில் அதிபர்களும் பயன் பெறவே ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பொருளாதாரத்தை சீர் குலைத்த இந்த செயலால் நாட்டில் வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளது. இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi #Congress #DeMonetisation

    ஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #IndependenceDayIndia #PMModi
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    ஊழல்வாதிகளுக்கும் கருப்புப் பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். ஊழல்வாதிகள் மற்றும் கறுப்பு பணம் வைத்திருப்போரை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு உதவியை சட்டப்புறம்பாக பெற்று வந்த 6 கோடி பேர் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். நலத்திட்ட உதவிக்கான ரூ.90,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    REFORM, PERFORM, TRANSFORM (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரக மந்திரம். நேர்மையாக வரி செலுத்துவோரால்தான் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் வரிப்பணம் மக்கள் நலனுக்கே செலவிடப்படும். வாரிசு அரசியலை மத்திய அரசு ஒழித்துள்ளது. வரி செலுத்தும் ஒவ்வொரு வரும் ஏழைக் குடும்பங்கள் வயிறார சாப்பிட உதவுகிறார்கள்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #IndependenceDayIndia #Modi #PMModi
    சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை பெற அந்நாட்டு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். #IndiaSwitzerlanddiscuss
    புதுடெல்லி: 

    சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அளிக்க புதிய நெறிமுறைகளை ஏற்படுத்த அந்நாட்டு பாராளுமன்றக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி இக்னாஸியோ கேஸிஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் வங்கி கணக்கு எண், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண் (டின்) முதலீடு செய்துள்ள பணத்தின் மூலம் கிடைத்த வட்டி மற்றும் ஈவுத்தொகை, காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்துகளை விற்றுபெற்ற மூலதனங்கள் போன்ற விபரங்கள் பரிமாறப்பட வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaSwitzerlanddiscuss #sharinginformation #informationonblackmoney
    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.

    அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.

    அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

    அந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

    அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.

    40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
    நைஜீரியா முன்னாள் அதிபர் அபசா சுவிஸ் வங்கியில் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
    அபுஜா:

    நைஜீரியாவில் கடந்த 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை அபசா அதிபராக இருந்தார். அவர் தனது பதவி காலத்தில் பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை பதுக்கினார்.

    அவற்றை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்தார். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இந்த விவகாரம் நைஜீரியாவில் பெரும் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முகம்மது புகாரி சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகி விட்டார். அதை தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி அதிகாரிகளுடன் நைஜீரிய அரசு பேச்சு நடத்தியது.

    அதனை தொடர்ந்து உலக வங்கி மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    அதை நஜீரியாவில் வசிக்கும் 3 லட்சம் குடும்பங்களுக்கு சமமாக பிரித்து வழங்க அரசு முடிவு செய்தள்ளது.
    சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

    பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

    மேலும், ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது. பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி. பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி என சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என பதிவிட்டுள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
    ×