search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rs 300 crore money"

    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.

    அந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.

    அந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.

    அந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


    சுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.

    அந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.

    40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை. #SwissBank
    ×