search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்புப்பண வழக்கு - நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைப்பு
    X

    கருப்புப்பண வழக்கு - நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைப்பு

    வெளிநாட்டில் சேர்த்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டப்படாததால் நளினி சிதம்பரம் உள்பட 3 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. #NaliniChidambaram
    சென்னை:

    இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்துக்களின் விவரங்களை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது.

    இவர்கள் மீது வருமான வரித்துறை, கருப்பு பணம் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் அவரது மகன், மருமகள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த 3 பேரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    இந்த நிலையில், கருப்புப் பணம் தடுப்புச்சட்ட வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மலர்விழி விசாரணையை அக்டோபர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #NaliniChidambaram
    Next Story
    ×