search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi Pooja"

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
    • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார்.
    • மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

    மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மாநிலத்துணைத்தலைவர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், விவசாய அணி ரமேஷ் குமார், நகரத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ரமேஷ், பன்னீர் செல்வகுமார், துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
    • ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு அமைச்சர் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம் பகுதியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ரூ. 91 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

    மேலும் வெள்ளகோவில் அருகே உள்ள வேலாயுதகவுண்டர்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நன்கொடையாக பெறப்பட்ட காலணிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் கள்ளமடை என்ற இடத்தில் ரூ.51 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வெள்ளகோவில் ஆர்.பி.எஸ். மஹாலில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகக் கடைகளை பார்வையிட்டு ஒரு சில புத்தகங்களை வாங்கினார்.வெள்ளகோவிலில் ரூ.40 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஓலப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட கம்ப்யூட்டரை பள்ளிக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஏ.லட்சுமணன். திமுக. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், துணைச் செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன். வேலப்பநாயக்கன்வலசு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், கால்நடை மருத்துவ இணை இயக்குனர் பாரிவேந்தன், மருத்துவர்கள் பிரகாசம், பகலவன் உட்பட தி.மு.க. பிரமுகர்கள், கால்நடை துறை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.
    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் முத்தூர் பேரூராட்சித்தலைவர் சுந்தராம்பாள் உள்ளனர்.

    • மறவபாளையம் ஊராட்சியில் ரூ.26.98 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • பரஞ்சோ்வழி ஊராட்சியில் ரூ.91.34 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    ரூ.2.47 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை துவக்கிவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மறவபாளையம் ஊராட்சியில் குடிநீா்க் குழாய்கள் விஸ்திரிப்பு பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள், மேல் நிலைத்தொட்டி கட்டும் பணிகள் என ரூ.26.98 லட்சம் மதிப்பீட்டிலும், கீரனூா் ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 32 நபா்களுக்கு இல்ல குடிநீா் இணைப்பு வழங்குதல், வடிகால் அமைக்கும் பணி, மேல்நிலைத்தொட்டி கட்டும் பணிகள் என ரூ.20.89 லட்சம் மதிப்பீட்டிலும், பரஞ்சோ்வழி ஊராட்சியில் தாா்ச் சாலை மேம்பாட்டு பணி, குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்து 90 நபா்களுக்கு தனிநபா் இல்ல குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, சுகாதார வளாகம் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல் என ரூ.91.34 லட்சம் மதிப்பீட்டிலும்,

    நத்தக்காடையூா் ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 222 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி என ரூ.43.10 லட்சம் மதிப்பீட்டிலும், மருதுறை ஊராட்சியில் குடிநீா்க் குழாய் விஸ்தரிப்பு செய்து 105 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, தாா் சாலை அமைக்கும் பணி, நியாய விலைக்கடை கட்டும் பணி என ரூ.32.41 லட்சம் மதிப்பீட்டிலும், பழையகோட்டை ஊராட்சியில் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு செய்து 115 தனிநபா் இல்லக் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, சுகாதார வளாகம் கட்டும் பணி, தாா் சாலையாக மேம்பாட்டு பணிகள் என ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.இதில், காங்கயம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி வரதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து சாக்கடை வடிகால், ஆழ்குழாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் அருகே துங்காவியில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் தேவை என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதே ஊராட்சியில் சீலநாயக்கன்பட்டியில் பொது சுகாதார கழிப்பிடம் கட்ட ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், சாக்கடை வடிகால் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன்,துணைத் தலைவர் பொன்னுத்தாயி, மடத்துக்குளம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எஸ்.காளீஸ்வரன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது
    • ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்,

    தாராபுரம் :

    தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். அதன்படி காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு, பூளவாடி ரோடு, நாடார் தெரு, மணியம்மை நகர், சித்தார்த்தன் பாளையம், நாச்சிமுத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுபாலங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

    அப்போது நகராட்சி ஆணையர் ராமர், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், துரை சந்திரசேகர், சக்திவேல், ஹைடெக் அன்பழகன், மலர்விழி கணேசன், ராசாத்தி பாண்டியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி  :

    தமிழக செய்தித்துறை அமைச்சர்மு .பெ.சாமிநாதன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்துமுடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ச. பெரியபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48.9 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர்-விஜயமங்கலம் ரோடு முதல் விநாயகபுரம் வழியாக திருப்பூர் விஜயமங்கலம் ரோடு வரையிலும் சாலை மேம்படுத்தும்பணியினையும், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் ரூ.71.19 லட்சம் மதிப்பீட்டில்வாமலைக்கவுண்டன்பாளையம் முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்படுத்தும்பணியினையும், மொரட்டுப்பாளையம் ஊராட்சி அங்கப்பா நகரில் ரூ.10.90 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய ஆதிதிராவிடர் காலணியில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடக்கட்டிடம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தும், வெள்ளியம்பதி ஊராட்சியில் ரூ.26லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.171.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்பிரேமா ஈஸ்வரமூர்த்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை
    • ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் ஊராட்சி பகுதியில் 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி,சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    விழாவில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் குமார் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மழை காலங்களில் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.
    • பாலம் கட்டும் பணி 12 மாத காலத்தில் முடிவு பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை கிராமப் பகுதி வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. இதில் ஈரோடு மாவட்ட பகுதிக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ள மருதுறையில் தரைமட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக சென்னிமலை, அரச்சலூருக்கும், நத்தகாடையூர், முத்தூர் பகுதிக்கும் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

    இதில் மருதுறையில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் உயரம் குறைவாக உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்லும் போது, பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி தான் இரு புறங்களில் உள்ள பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மருதுறை பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் புதிய பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.இதையடுத்து மருதுறை ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

    பாலத்தின் நீளம் 128 மீட்டர் ஆகும். 16மீட்டர் நீளமுள்ள 8 கண்களும், 7.50 மீட்டர் அகலமும், ஒவ்வொரு பக்கமும் 0.725 மீட்டர் நடைபாதை அகலமும். ஒவ்வொரு பக்கமும் 0.50 மீட்டர் விபத்து தடுப்பானும் என 9.95 மீட்டர் பாலத்தின் மொத்த அகலம் மற்றும் திறந்த அடித்தளமும் அமையவுள்ளது. மருதுறை பக்கம் 60 மீட்டர். கே.ஜி.வலசு பக்கம் 155 மீட்டர் அணுகு சாலை அமையவுள்ளது. இந்த பாலம் கட்டும் பணி 12 மாத காலத்தில் முடிவு பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிதம்பரம், சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிறப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மருதுறை ஊராட்சி தலைவர் செல்வி சிவகுமார், கீரனூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்படுவதற்கான பூமிபூஜை
    • பூஜைக்கு பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மங்கலம்,

    திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவபாளையம் பகுதியில் புதிதாக ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் கட்டப்பட உள்ளது.இதற்கான பூமிபூஜை வேட்டுவபாளையத்தில் நடந்தது. இந்த பூஜைக்கு எம்.செட்டி பாளையம்- வி.ஜெயம்என்.மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.மேலும் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி,பழனிச்சாமி,சாமிநாதன்,வேலுச்சாமி,சந்திரசேகர்,துளசிமணி,சௌந்தரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×