மடத்துக்குளம் துங்காவியில் புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து சாக்கடை வடிகால், ஆழ்குழாய் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.
சி.மகேந்திரன் MLA பணிகளை தொடங்கி வைகப்பட்ட காட்சி
சி.மகேந்திரன் MLA பணிகளை தொடங்கி வைகப்பட்ட காட்சி
Published on

மடத்துக்குளம் :

மடத்துக்குளம் அருகே துங்காவியில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் தேவை என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதே ஊராட்சியில் சீலநாயக்கன்பட்டியில் பொது சுகாதார கழிப்பிடம் கட்ட ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், சாக்கடை வடிகால் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் அமைக்க துங்காவி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பூமி பூஜை நடந்தது.

இதில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன்,துணைத் தலைவர் பொன்னுத்தாயி, மடத்துக்குளம் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எஸ்.காளீஸ்வரன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com