என் மலர்
நீங்கள் தேடியது "developnment work"
- திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
- ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
- ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர், மண்டல பொறியாளர், பல்லடம் நகராட்சி தலைவர், ஆணையாளர், திமுக பொறுப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி பகுதியில், நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். பல்லடம் வடுகபாளையம் குட்டையை ரூ.3.54. கோடியில் மேம்பாடு செய்து பூங்கா அமைக்கும் பணி, சின்னையா கார்டன் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பூங்கா மேம்பாட்டு பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சிகளின் திருப்பூர் மண்டல இயக்குனர் ராஜன், மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், ஆணையாளர் விநாயகம், நகர் திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






