search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi Pooja"

    • கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.
    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

    பல்லடம் :

    .பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் ஊராட்சி வெள்ள நத்தத்தில் ரூ.14 லட்சத்தில் காட்டூர் ரோடு முதல் காட்டம்பட்டி ரோடு வரை தார் சாலை, ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, அலகுமலை ஊராட்சி வேலாயுதம்பாளையத்தில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கண்டியங்கோயில் வேளாங்காட்டு பாளைய த்தில் ரூ. 8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, முதியாநெரிச்சலில் ரூ .1லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

    அதே போல தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாயில் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ராமசாமி நிதி மூலம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.இதில் பல்லடம் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சிவாசலம்,ஒன்றிய செயலாளர் காட்டூர் சிவபிரகாஷ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், பரணிகுமார் , திருநாவுக்கரசு,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.
    • குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மின் நகர், மகாவிஷ்ணு நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.இதையடுத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார்,சண்முகசுந்தரம்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ராமசாமி, சுப்பிரமணியம், மணியன், தங்கராஜ் சித்ரா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் அருகில் இருந்து சமத்துவபுரம் வரை ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய தலைவர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன், ஒன்றிய தலைவர் ஐஸ்வர்யா மகாராஜா, பாசறை செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் மேக்கனம் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
    • வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 14-வது வார்டில் கருகம்பாளையம் மெயின்ரோடு முதல் சேனாதோட்டம் வரை சுமார் 400மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி,14-வது வார்டு கவுன்சிலர் துளசிமணி ஆறுமுகம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதியிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 65,26,000 மதிப்பில்நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிஒன்றிய பொறியாளர் கற்பகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் , பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சென்னியப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் , சுப்பிரமணி , ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதிய பள்ளி அறைகள் கட்டுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல்நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்,தொடர் முயற்சி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர்,ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளிமேலாண்மை குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
    • ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 1கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி அங்குள்ள லட்சுமி நகரில் ரூ.6லட்சத்து66 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடத்தி பணி துவக்கி வைக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி( பல்லடம்), வக்கீல் குமார் (பொங்கலூர்), பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே, நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் மனோன்மணி, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், காங்கிரஸ் நிர்வாகி ரவி மற்றும் கோகுல், ஊராட்சி செயலாளர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்லடம் வடுகபாளையம், கணபதி பாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர்,கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடியில் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்ந்த தரத்தில் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனைக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகமானது 10,520 ச.அடி பரப்பளவில் பணியாளர் அறை, வீடியோ செயற்கைகோள்; வகுப்பறை, இணையதள வகுப்பறைகள், செயல்முறை மதிப்பு பகுப்பாய்வு வகுப்பறைகள், பவர் டெவலப்மென்ட் வகுப்பறைகள், இயந்திர பகுதி மற்றும் ஆண், பெண் கழிவறைகள் இக்கட்டடத்தில் அமையப்பெற உள்ளது.

    இவை அனைத்தும் உயர்ந்த தரத்தில் உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • மூலிகை பண்ணை அமைக்க பூமி பூஜை நடந்தது.
    • யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டாப்ப நாயக்கனூர் ஊராட்சியில் உள்ள குன்னூத்துப்பட்டியில் மதுரை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ மூலிகை பொருட்கள் பண்ணை அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.

    யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

    வேளாண்மை ஆத்மா குழு தலைவர் சுதந்திரம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் உதயகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சிவசங்கர், உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் கண்ணன், வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் மகேந்திரன், உயிரியல் தொழில்நுட்பத் துறை ரேணுகா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகராட்சி பகுதியான அரசகுலி மயானம் அருகே எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

    இந்த தகன மேடைக்கான பூமி பூஜை மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பூமி பூஜையில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் , ஒன்றியசெயலாளர் அண்ணாதுரை, நகர்செயலாளர் பொன்னுசாமி , கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், சண்முகப்பிரியா, புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 2வது வார்டு சேடபாளையத்தில், ரூ. 9.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டுதல், மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி ஆகியவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,2வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×