search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமானபணி"

    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதியிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 65,26,000 மதிப்பில்நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிஒன்றிய பொறியாளர் கற்பகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் , பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சென்னியப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் , சுப்பிரமணி , ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதிய பள்ளி அறைகள் கட்டுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல்நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்,தொடர் முயற்சி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர்,ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளிமேலாண்மை குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • அவென்யூ பகுதிகளில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கரிக்குளம் தூர்வாரி தடுப்பு சுவர் நடைபாதை மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுபோல் ரயிலடி தோப்பு தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த சமைய லறை ரூ.23 லட்சம் செலவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. காமராஜர் அவென்யூ பகுதியில் ரூ.52 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், கணக்கர் ராஜ கணேஷ், கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், முபாரக்அலி, பாலமுருகன், நாகரத்தினம் செந்தில் உடன் இருந்தனர்.

    ×