என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MSM.Anandhan MLA"

    • யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
    • வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம் .எஸ். எம். ஆனந்தன் பங்கேற்றார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    அதன் இடையிலே யார் வேண்டுமானாலும் வருவார்கள் , போவார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கட்சியை விட்டு நீக்கும் உரிமை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.
    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

    பல்லடம் :

    .பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் ஊராட்சி வெள்ள நத்தத்தில் ரூ.14 லட்சத்தில் காட்டூர் ரோடு முதல் காட்டம்பட்டி ரோடு வரை தார் சாலை, ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, அலகுமலை ஊராட்சி வேலாயுதம்பாளையத்தில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கண்டியங்கோயில் வேளாங்காட்டு பாளைய த்தில் ரூ. 8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, முதியாநெரிச்சலில் ரூ .1லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

    அதே போல தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாயில் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ராமசாமி நிதி மூலம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.இதில் பல்லடம் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சிவாசலம்,ஒன்றிய செயலாளர் காட்டூர் சிவபிரகாஷ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், பரணிகுமார் , திருநாவுக்கரசு,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×