search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால​ம்"

    • மழை காலங்களில் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.
    • பாலம் கட்டும் பணி 12 மாத காலத்தில் முடிவு பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை கிராமப் பகுதி வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. இதில் ஈரோடு மாவட்ட பகுதிக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ள மருதுறையில் தரைமட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக சென்னிமலை, அரச்சலூருக்கும், நத்தகாடையூர், முத்தூர் பகுதிக்கும் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

    இதில் மருதுறையில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் உயரம் குறைவாக உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்லும் போது, பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி தான் இரு புறங்களில் உள்ள பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மருதுறை பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் புதிய பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.இதையடுத்து மருதுறை ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

    பாலத்தின் நீளம் 128 மீட்டர் ஆகும். 16மீட்டர் நீளமுள்ள 8 கண்களும், 7.50 மீட்டர் அகலமும், ஒவ்வொரு பக்கமும் 0.725 மீட்டர் நடைபாதை அகலமும். ஒவ்வொரு பக்கமும் 0.50 மீட்டர் விபத்து தடுப்பானும் என 9.95 மீட்டர் பாலத்தின் மொத்த அகலம் மற்றும் திறந்த அடித்தளமும் அமையவுள்ளது. மருதுறை பக்கம் 60 மீட்டர். கே.ஜி.வலசு பக்கம் 155 மீட்டர் அணுகு சாலை அமையவுள்ளது. இந்த பாலம் கட்டும் பணி 12 மாத காலத்தில் முடிவு பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிதம்பரம், சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிறப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மருதுறை ஊராட்சி தலைவர் செல்வி சிவகுமார், கீரனூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×