search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "akhilesh yadav"

    • இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    • இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் நடத்தியது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    குஜராத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி லக்னோவில் நடைபெற்று இருந்தால் இந்திய அணிக்கு பலரது ஆசிர்வாதம் கிடைத்திருக்கும். பகவான் விஷ்ணு மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசிர்வாதமும் இருந்திருக்கும். இந்தியா உலக கோப்பையையும் வென்று இருக்கும். தற்போது ஆடுகளத்தில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாதனை.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    போட்டி குஜராத்தில் நடைபெற்றதாலும், பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்றதனாலும் இந்திய அணி தோல்வியடைந்ததாக அரசியல் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும், ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகவும் ஸ்லோவாக இருந்தது. பின்னர், இரவில் விளையாடும்போது பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது என்ற விமர்சனம் மெல்லமெல்ல எழுந்து வருகிறது.

    ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி பிரதமர் "PM Means Panauti Modi" எனக் குறிப்பிட்டிருந்தார். "Panauti" என்றால் துரதிருஷ்டம் அல்லது துரதிருஷ்டத்தை வரவழைப்பவர் என்று அர்த்தம். இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர அகிலேஷ் யாதவ் கூறுகையில் "உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்றது. இது லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்திய அணிக்கு அதிக அளவில் ஆசீர்வாதம் (blessings) கிடைத்திருக்கும்.

    லக்னோவில் போட்டி நடைபெற்றிருந்தால் கடவுள் விஷ்ணு மற்றும் வாஜ்பாய் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். தற்போது, ஆடுகளம் குறித்த சில பிரச்சனைகளை கேட்க முடிகிறது" என்றார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என அகிலேஷ் குற்றம்சாட்டினார்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    போபால்:

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    ராகுல்காந்தி நேற்று பேசும்போது இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. இது ஒவ்வொரு சமூக மக்களை எடுத்துக்காட்டும் எக்ஸ்ரே என்றார்.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

    சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது மிகப்பெரிய அதிசயம். எக்ஸ்ரே பற்றி பேசுபவர்கள் தான் சுதந்திரத்திற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தியவர்கள். எக்ஸ்ரே என்பது அந்தக் காலத்தின் தேவை. தற்போது எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் வைத்துள்ளோம். தற்போது நோய் பரவிவிட்டது. இந்தப் பிரச்சினையை அப்போதே தீர்த்து இருந்தால் இவ்வளவு பெரிய இடைவெளி என்பது இருந்திருக்காது.

    சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. இன்றைக்கு அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறார்கள்? ஏனென்றால் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது இல்லை என்பது அவர்களுக்கு தெரியும் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தது.
    • பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் காழஞ்சி பிறப்பு உலக அளவில் செய்தியானது.

    லக்னோ:

    மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகமான ஒரு மாதத்துக்குள் ஒரு குழந்தை பிறந்தது.

    உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு வங்கியில் சர்வேஷா தேவி வரிசையில் காத்திருந்தபோது காழஞ்சி நாத் பிறந்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பிறந்ததால் இவனது பிறப்பு உலக அளவில் செய்தியானது. காழஞ்சி என்றால் புதையல் என்று பொருள்.

    சின்னஞ்சிறு காழஞ்சி மாநில தேர்தல் பிரசாரத்தில் சுவரொட்டிகளில் இடம் பெற்றான். ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தின் சுவரொட்டியில் குழந்தை இடம்பெற்றது.

    குழந்தை பிறந்த பிறகு சர்வேஷா தேவிக்கு வங்கி வரிசையில் காத்திருந்தபோது குழந்தை பிறந்தமைக்காக நிவாரணமாக அரசு 2 லட்சம் ரூபாய் அளித்தது.

    இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் காழஞ்சி நாத்தின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றை இந்த கூட்டணி தோற்கடிக்கும்.
    • அகிலேஷ் யாதவின் இந்த பேச்சு இந்திய கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இந்தியா கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அவர் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைப்பதாக அறிவித்து உள்ளார்.

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பிரமாண்ச பேரணி நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி (பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம். பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றை இந்த கூட்டணி தோற்கடிக்கும்.

    பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. மேலும், இந்த கட்சிகளின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் பி டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. சமாஜ்வாடியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்னேறும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை. எங்களது பி.டி.ஏ. அவர்களுக்கு தகுந்த பதிலை அளிக்கும்.

    பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒன்றுதான். அவர்களின் கொள்கைகள் ஒன்றுதான். 2 கட்சிகளும் மத்திய பிரதேசத்தில் ஊழலையும், கொள்ளையையும் உருவாக்கியுள்ளன. 2 கட்சிகளும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு துரோகம் இழைத்துவிட்டன.

    தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஏழைகளாக இருப்பதை இந்த கட்சிகள் விரும்புகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு கூட வழங்கவில்லை. பா.ஜ.க. மற்றும் காங்கிரசின் தவறான கொள்கைகளால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சிரமப்படுகின்றனர்.

    காங்கிரசின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. இப்போது பா.ஜ.க.வும் அதே பாதையில் செல்கிறது. 2 கட்சிகளும் ஓ.பி.சி., தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஏமாற்றி வருகின்றன.

    எனவே, நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நாளில் 2 கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். ஏழைகள், விவசாயிகள், ஓபிசிக்கள், தலித்கள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் ஒன்று கூடினால்தான் மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸை அழிக்க முடியும். விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி போராடும் என்று பேசியுள்ளார்.

    அகிலேஷ் யாதவின் இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. இது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
    • இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்

    வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

    தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.

    கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.

    இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
    • மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது.

    லக்னோ:

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடக்கிறது. இங்கு பா.ஜ.க. ஆளும் கட்சியாக திகழ்கிறது.

    முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் சமாஜ்வாடிக்கு 6 தொகுதிகள் வழங்க முடிவு எட்டப்பட்டு இருந்த நிலையில், 229 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. இதனால் சமாஜ்வாடி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி சார்பிலும் 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் அங்கு இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடாது என்றும், சமாஜ் வாடியுடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உ.பி.யின் ஹர்டோய் மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு பின் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புகிறதா, இல்லையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். எங்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம். உங்களுடன் கூட்டணி குறித்து மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க தனியாக போட்டியிடுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்.

    கூட்டணி இல்லை என்றால் எங்களை அழைத்தது ஏன்? 2024 பாராளுமன்ற தேர்தலில் மட்டும்தான் கூட்டணி, மாநில அளவில் கூட்டணி கிடையாது என்பதை அவர்கள் தெளிவாக தெரிவித்து இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அவருக்கு மரியாதை செலுத்தச் சென்ற அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்துவதற்காக அங்கு

    தொண்டர்களுடன் திரண்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    அங்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு கதவும் மூடப்பட்டது. இதைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் கோஷமிட்டனர்.

    இந்நிலையில், அகிலேஷ் யாதவ் அருகிலுள்ள சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.
    • உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

    நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸூக்கு முன்பே இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ரஜினி சென்றார்.

    தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்.

    இதையடுத்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

    சந்திப்புக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த், "9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்" என்றார்.

    • உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

    சென்னை:

    முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி ஜூன் 12-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள்.

    என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

    மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.

    • புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
    • நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.

    கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.

    43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.

    இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

    25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    ×