search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்ரே"

    • சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என அகிலேஷ் குற்றம்சாட்டினார்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    போபால்:

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    ராகுல்காந்தி நேற்று பேசும்போது இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. இது ஒவ்வொரு சமூக மக்களை எடுத்துக்காட்டும் எக்ஸ்ரே என்றார்.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

    சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது மிகப்பெரிய அதிசயம். எக்ஸ்ரே பற்றி பேசுபவர்கள் தான் சுதந்திரத்திற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தியவர்கள். எக்ஸ்ரே என்பது அந்தக் காலத்தின் தேவை. தற்போது எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் வைத்துள்ளோம். தற்போது நோய் பரவிவிட்டது. இந்தப் பிரச்சினையை அப்போதே தீர்த்து இருந்தால் இவ்வளவு பெரிய இடைவெளி என்பது இருந்திருக்காது.

    சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. இன்றைக்கு அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறார்கள்? ஏனென்றால் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது இல்லை என்பது அவர்களுக்கு தெரியும் என கூறினார்.

    • மின் இணைப்பு இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருந்தனர்.
    • உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

    கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.

    இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக் கப்பட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அனைத்து வயர் களும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பொதுப் பணித் துறை அதி காரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.

    இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின் றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    ×