search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udhayanithi stalin"

    • படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

    டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். நேற்று ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.

    நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் கல்லூரி பருவத்ஹின் முதல் வயது முதிர்ந்த காலம் வரை டிரெயிலரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவன் நடிகராக முயற்சிக்கும் பயணத்தில் அவன் படும் அவமானங்கள் , துக்கங்கள், காதல் இழப்பு, நடிபு பிறிவு, சமூகத்தில் மதிக்காமல் போவது, பணமில்லாமல் சுற்றுவது என பல காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது.

    கவின் டிரெயிலரில் வரும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியுள்ளார். கோபம், இயலாமை, காதல் என நடிப்பை வேறுபடுத்தி காட்டியுள்ளார். சமீப காலத்தில் வெளிவந்த டிரெயிலர்களில் மிக சிறந்த டிரெயிலராக ஸ்டார் படத்தின் டிரெயிலர் அமைந்துள்ளது. அதனால் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    டிரெயிலரை பார்த்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் " ஸ்டார் படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே உடனே படத்தை பார்க்க வேண்டும்போல் இருந்தது. காட்சிகள், தோற்றம் என அனைத்தும் ஈர்க்கிறது. இது ஒரு நல்ல படம் எனத் தோன்றுகிறது" என கூறியுள்ளார்.

    படத்தை உதயநிதி பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை.
    • அவர் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.

    பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.

    #TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
    • திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.

    தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.

    பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.

    தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?

    சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
    • 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

    தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?

    2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?

    இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?

    கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?

    ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

    அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

    அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

    கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?

    வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?

    நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

    #பதில்_சொல்லுங்கள்_மோடி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை சின்னப்பிள்ளைக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
    • சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

    மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

    இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

    'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.

    • லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ₹1 லட்சம் வெகுமதி வழங்கினார்.

    ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த புளியரையைச் சேர்ந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ₹1 லட்சம் வெகுமதி வழங்கினார்.

    இதற்கு முன்னதாக, சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கினார்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் 'எஸ்' - வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

    அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை தடுத்துள்ளனர்.

    உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    • நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.

    சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.

    • விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அரசியலுக்கு வர முடிவு எடுத்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார் உதயநிதி.

    சென்னை:

    நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில், சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது என கூறினார்.

    • இசை நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றார்.

    சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல் துறையின் இசைக்குழுவினர் இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

    அதற்கான நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்தோம். நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறை சார்பில் பொது வெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்கும் நோக்கோடு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 5-வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 8 வீரர்களுக்கு காசோலை.

    தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.

    இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்கும் நோக்கோடு கழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட்டியில் (IWAS - THAILAND) கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.38.40 லட்சத்துக்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இன்று வழங்கினோம்.

    மேலும், ஆஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற ஆசிய ஓசியானியா சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் கலந்து கொண்ட செரிப்ரல்பால்சி வீரர்களான பாண்டியராஜன் & ஜோஷ்வா ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு தலா ரூ.1.89 லட்சத்துக்கான காசோலையையும் - சீனாவில் நடைபெற்ற 19-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தம்பி ஆ.குஹன்வசந்த் மற்றும் லக்னோவில் நடைபெற்ற 5-வது தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளையும் இன்று வழங்கினோம்.

    நம் விளையாட்டு வீரர் – வீராங்கனையர் சாதிப்பதற்கு எந்த தடையும் இல்லாமல், வெற்றிகளை குவிக்க கழக அரசு என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை.
    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு மீது நடத்தப்பட்ட விசாரணை முடிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    • ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
    • உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

    வரும் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், இன்று இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×