search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றி கழகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள்
    • தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும்

    சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்

    தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் ரசிகர்கள் ஒருவேளை என்னை கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.

    அண்மையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சிகள் உறுப்பினர் ஆவதற்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த செயலி மூலம் உறுப்பினர்கள் சேரலாம் என்று விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியில் 50 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி TVK என சுருக்கமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகமும் TVK என அழைக்கப்படுகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே எனது கட்சியை TVK என அழைக்கும் நிலையில் விஜய் கட்சிக்கு எப்படி TVK என அழைக்கலாம் என தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.

    மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளர் வி. சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ. விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல். பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    • பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
    • அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.

    யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.

    கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
    • அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். அதிகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட விஜய் அரசியலில் களமிறங்குவதை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

    தனது அரசியல் கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என விஜய் பெயர் சூட்டியிருந்தார். இவரின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே பலரும் தகவல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், விஜயின் அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

     


    மேலும், இவரது அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாகவும், சிலர் தமிழகமா தமிழ்நாடா? என்பதில் சந்தேகம் தெரிவித்தனர். இந்த நிலையில், கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதை விஜய் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை திருத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வெற்றிக்கு பக்கத்தில் "க்" என்ற எழுத்தை சேர்த்து "தமிழக வெற்றிக் கழகம்" என திருத்தம் செய்து மீண்டும் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    • நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
    • தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டி.வி.கே. என வருகிறது.

    சென்னை:

    விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி 2012-ல் தொடங்கப்பட்டு, கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.

    தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.


    தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


    நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.

    தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, 'வாழ்த்துகள்' என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ கட்சியை தொடங்கியுள்ளார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


    இதைத்தொடர்ந்து, திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
    • பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2-ந் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மாநிலம் முழுவதும் பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தொண்டர்களால் ஒட்டப்பட்டன.

    இந்நிலையில் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். கிராமங்களிலும் நகர் புறங்களிலும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இனிப்பு வழங்கி கட்சியின் பெயரை சொல்லி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக அம்பத்தூரில் கண்தான முகாம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வில்லிவாக்கம், கே.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய்யின் அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து உற்சாகத்தில் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

    • நடிகர் பாலா பல சேவைகளை செய்து வருகிறார்.
    • மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ வசதி இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையும் வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் பாலாவிடம் விஜய் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை.


    எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன். இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார்.


    ×