search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி"

    • பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.
    • சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 3-ந் தேதி மனு தாக்கல் செய்ய வந்த அவர், ரோடு-ஷோவிலும் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் எங்கும் காணப்படவில்லை.

    இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ராகுல்காந்தி வருகிற 15 மற்றும் 16-ந் தேதி வய நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தபட மாட்டாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஹாசன் கூறியதாவது:-

    வயநாட்டில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அல்லது கூட்டணி கட்சிகளின் கொடிகளை காட்டுவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் சின்னங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கட்சியின் முடிவுக்கான காரணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் மற்ற தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் விரும்பினால் கொடியை பயன்படுத்தலாம்.

    அடுத்த வாரம் முழுவதும் கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங் களில் பங்கேற்க உள்ளார். சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன. தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.
    • பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

    விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

    இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • நடிகை அனுபமா பரமேஷ்வரன் தமிழில் 'கொடி' படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார்.
    • ஜெயம்ரவி நடித்திருக்கும் ’சைரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 2015-ல் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஷ்வரன். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையொட்டி தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.தொடர்ந்து தமிழில் 'கொடி' படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார்.


    அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் 'சைரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் பட வாய்ப்புக்காக படுக்கை அறையில் நடிக்க தயாராக இருப்பதாகவும், 'லிப் லாக்' காட்சிகளில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நடிகை அனுபமா பரமேஷ்வரன் படங்களின் தொடர் வெற்றியால் தன் சம்பளத்தை உயர்த்தியதாக செய்தி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர்.
    • ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    மதுக்கூர் அருகே ஆலத்தூரில் பா.ஜ.க. சார்பில் கொடியேற்ற போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்பட கட்சியினர் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமையில் மாநகர தலைவர்கள் சதீஷ் (வடக்கு), பாலா (கிழக்கு), வெங்கடேசன் (மேற்கு), மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், கொள்கை பரப்பு பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாரத்ரவீந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு பிரிவு தலைவர் நவீன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். இதையடுத்து ஆலக்குடியில் கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
    • பொன்னேரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிளைகளில் கொடி கம்பம் அமைத்து கட்சி கொடியேற்றுமாறு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்ததை அடுத்து மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

    இதில்ஆன்மீகப் பிரிவு மாநில செயலாளர் குமார், பட்டியல் அணி மாநிலசெயலாளர் அன்பாலயா சிவகுமார், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா பட்டியல் அணிமாவட்ட தலைவர் வேலவன், மாவட்டத் துணைத் தலைவர் பரமானந்தம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரி மாவட்ட செயலாளர் கோட்டி, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு, பொன்னேரி நகரத் தலைவர் சிவக்குமார், மாவட்ட தமிழ் இலக்கிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், பட்டியல் அணி பொதுச் செயலாளர் இளங்கோவன், நகர பொதுச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் பாலாஜி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று மாலை ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ். அணியினர் கட்சி கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி போலீசில் கடந்த சனிக்கிழமை புகார்கள் அளிக்கப்பட்டன.

    ஏற்கனவே கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம். எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றனர். அதேபோல் சற்று திருத்தம் செய்யப்பட்ட கொடி திருச்சி மாநாட்டில் முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே திருச்சி மாநாடு உள்பட எந்த இடத்திலும் அ.தி.மு.க.வின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசில் புகார்கள் அளித்துள்ளோம்.

    அதையும் மீறி இந்த மாநாட்டிற்காக அ.தி.மு.க. பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சி தலைமையிடம் ஆலோசித்த பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார். 

    • மதங்களை கடந்து சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
    • இரவு 9 மணிக்கு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ருக் (அன்னதானம்) வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்காவில் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடை பெற்றது. கொட்டும் மலையிலும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தர்கா பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மதங்களைக் கடந்து சாதி மத வேறு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    8.12.22 வியாழக்கிழமை மஹாரிபு தொழுகைக்குப் பின் புனித திருக்குர்ஆன் ஷரிப் ஓதி தமாம் செய்து ஆண்டவரின் புனித மௌலது ஷரிப் ஓதி துவா செய்து இரவு 9 மணிக்கு புனிதக் கொடி இறக்கப்பட்டது. அனைவ ருக்கும் தப்ருக் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இறுதியில் முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்த அனைத்து தரப்பு

    மக்களுக்கும் ஊடகத்து றைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒத்து ழைப்பு தந்த அனைவருக்கும் தர்கா நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • 70 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்தார்
    • திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்

    திருச்சி ,

    திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் தி.மு.க. கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணைப் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே. என்.நேரு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மு கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவானன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே. என். சேகரன், என்.கோவிந்தராஜன், குணசேகரன், செந்தில், பகுதி செயலாளர்கள் மோகன், டி பி எஸ் எஸ் ராஜ் முகம்மது, இ எம் தர்மராஜ், மணிவேல், நீலமேகம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது

    தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது

    தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 205 அரசு ஊழியர்கள்-45 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
    • மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த கலெக்டர் அரவிந்த்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இதை தொடர்ந்து போலீ சார் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.

    இதை தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 14 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 17,ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீ சாருக்கு நற் சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

    10 ஊர்க்காவல் படையினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெதர்லாந் தில் நடந்த தடகளப்போட்டி யில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற போலீஸ் கிருஷ்ண ரேகாவிற்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்க னார்.

    ஊராட்சிகளில் சிறப் பாக பணிபுரிந்த ஊராட்சி களுக்கு கேடயங்க ளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சிக்கு கழிவு நீர் மேலாண்மை சிறப்பு செயல்பாட்டிற்காக கேடயம் வழங்கப்பட்டது.

    கிள்ளியூர் பேரூராட்சிக்கு மக்கள் இயக்கம் சிறப்பு செயல்பட்டிற்கும், ஆற்றூர் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை சிறப்பு செயல்பாட்டிற்கும், கப்பி யறை பேரூராட்சிக்கு திடக் கழிவு செயல்பாட்டிற்கு கேடயங்கள் வழங்கப்பட் டது.

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை, மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 205 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

    10 ஆண்டுகள் விபத்து இன்றி பணிபுரிந்தவர்க ளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கலெக்டரின் மனைவி கிருத்திகா, மகன் சிவேஷ், மகள் மசிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி வைஷாலி, மகள் மிஷ்விக், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா, தாசில்தார் சேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சார்பில் அனைத்து தொழில் நிறுவனங்களும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
    • தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர மோட்டாா் சக்கர (டயா்) சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் சங்கம், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாரி பாடி பில்டிங் சங்கம் பிரதிநிதி, லாரி கூண்டு கட்டும் சங்கம் மற்றும் பழுது பாா்ப்போா் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கு 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாளை(13ந்தேதி) முதல் 15ந்தேதி வரை சுதந்திரத் திருநாளை கொண்டாடும் வகையில் அனைத்து நிறுவனங்கள் முன்பாகவும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×