கட்சிக் கொடியுடன் பா.ஜனதா நிர்வாகிகள் கண்டன ஊர்வலம்

கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் பா.ஜ.க.வினர் கட்சி கொடியுடன் கண்டன ஊர்வலமாக சென்ற காட்சி.
தஞ்சையில் பா.ஜ.க.வினர் கட்சி கொடியுடன் கண்டன ஊர்வலமாக சென்ற காட்சி.
Published on

தஞ்சாவூர்:

மதுக்கூர் அருகே ஆலத்தூரில் பா.ஜ.க. சார்பில் கொடியேற்ற போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்பட கட்சியினர் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமையில் மாநகர தலைவர்கள் சதீஷ் (வடக்கு), பாலா (கிழக்கு), வெங்கடேசன் (மேற்கு), மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், கொள்கை பரப்பு பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாரத்ரவீந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு பிரிவு தலைவர் நவீன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். இதையடுத்து ஆலக்குடியில் கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com