என் மலர்
உள்ளூர் செய்திகள்

70 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி
- 70 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்தார்
- திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்
திருச்சி ,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் தி.மு.க. கொடியை 70 அடி உயர கொடி மரத்தில் தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணைப் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே. என்.நேரு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., மு கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவானன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே. என். சேகரன், என்.கோவிந்தராஜன், குணசேகரன், செந்தில், பகுதி செயலாளர்கள் மோகன், டி பி எஸ் எஸ் ராஜ் முகம்மது, இ எம் தர்மராஜ், மணிவேல், நீலமேகம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






