search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20"

    • கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்
    • மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.




    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது :-

    டி20 உலகக்கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

    சரியாக செயல்படாத வீரர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு 'பெர்பாம்' செய்தாலும் இதில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள்". என பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




    மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1 முதல் 29 வரை நடக்க உள்ளது
    • இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.




    இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,

    டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.



    மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.

    இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016 -ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021- ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
    • அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.

    ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. 

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    • ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் ஏப்ரல் 27-ந்தேதி வரை விளையாடுகிறது.
    • ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    நியூசிலாந்து டி20 கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கடந்த 17 மாதங்களில் 3-வது முறையாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட இருக்கிறது.

    முதல் மூன்று போட்டிகள் ஏப்ரல் 18, 20 மற்றும் 21-ந்தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெற இருக்கின்றன. ஏப்பரல் 25 மற்றும் 27-ந்தேதிகளில் முறையே 4-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான ஏப்ரல் 14-ந்தேதி நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றடையும்.

    இந்த தொடரின்போது பிசிசிஐ-யின் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறும். இதனால் பெரும்பாலான முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை. கடந்த முறையும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன் அணியில் இடம் பிடித்துள்ளார். டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னெர், கான்வே (தற்போது காயம் அடைந்து விளையாடாமல் உள்ளார்) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    கிளென் பிலிப்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், பெர்குசன் ஆர்சிபி அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த தொடர் இரு கிரிக்கெட் நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை குறிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    • டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன
    • விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

    29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான உகாண்டா முதல் முறையாக அறிமுகமாகிறது. இந்நிலையில் உலக கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

    • முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
    • 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.

    மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    • டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்.
    • டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 11-ம் தேதி துவங்க இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்து இருந்தனர்.

     


    2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வந்தனர்.

    இவர்களுக்கு மாற்றாக தேர்வுக்குழு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்தது. 

    • முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.

    பின்னர் தொடர் யாருக்கு என்பது நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி அதிகாலை) நடைபெற்றது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. 

    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    ×