என் மலர்

  நீங்கள் தேடியது "INDvAFG"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 111 ரன்களை மட்டுமே எடுத்தது.

  துபாய்:

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

  இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். இதனால் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது.

  இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்ராகிம் சட்ரன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார்.

  இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர்.
  • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது

  துபாய்:

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

  சூப்பர்-4 சுற்றில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட முற்பட்டு 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய விராட் கோலி சதம் கடந்தார். 53 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். தொடர்ந்து ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் சேர்க்க,  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட் எடுத்தார்.

  இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018
  இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

  கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.

  இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.  இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

  அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கு --- ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் #AsiaCup2018 #INDvAFG
  ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

  அஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

  ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.  தொடர்ந்து விளையாடிய ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 253 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷேசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். #AsiaCup2018 #INDvAFG
  ஆசிய கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  அஹமதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.

  ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

  இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

  இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. #AsiaCup2018 #INDvAFG
  துபாய்:

  ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

  ‘லீக்’ ஆட்டங்களில் ஹாங்காங்கை 26 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்திம் வென்றது. இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தது.

  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

  இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியாவின் அதிரடி நீடிக்கும்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது.

  பேட்டிங்கில் தவான் 327 ரன்னும், கேப்டன் ரோகித்சர்மா 269 ரன்னும், அம்பதி ராயுடு 116 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

  இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.


  தவான், டோனி அல்லது தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, சித்தார்த் கவூல், கலீல் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

  ஆப்கானிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை வீழ்த்தியது. ஆனால் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்திடம் தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

  இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இதில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. #AsiaCup2018 #INDvAFG
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மாயாஜால பந்து வீச்சாளர் ரஷித் கான். #INDvAFG
  இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கடந்த 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இரண்டே நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா தவான் (107), முரளி விஜய் (105) ஆகியோரின் சதத்தால் இந்தியா 474 ரன்கள் குவித்தது.

  டி20 போட்டியில் மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய ரஷித் கானால் ‘ரெட்’ பந்தில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவருடன் முஜீப் உர் ரஹ்மானும் திணறினார். முஜீப் உர் ரஹ்மான் அறிமுக போட்டியில் 15 ஓவரில் 75 ரன்கள் விட்டுக்கொடுது ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவர்தான்.  ரஷித் கான் 34.5 ஓவர்கள் வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 35 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசினார்.

  அறிமுக போட்டியில் 154 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 1952-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமிர் எலாஹி 134 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிக ரன்களாக இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, ஆப்கானிஸ்தான் அணி வீரர்களையும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார். #INDvAFG #AjinkyaRahane

  சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி கடந்த ஆண்டு அங்கிகாரம் அளித்தது. அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை எதிர்கொண்டது. 

  பெங்களூருவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விஜய் 107, தவான் 105, பாண்டியா 71, ராகுல் 54 ரன்கள் எடுத்தனர்.

  இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கும், 2-வது இன்னிங்ஸில் 103 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. இந்த போட்டி இரண்டு நாள் மட்டுமே நீடித்தது.   இந்நிலையில், இப்போட்டி முடிந்த உடன் இந்திய அணிக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கோப்பையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க நின்றனர். அப்போது, இந்திய அணியின் கேப்டன் ரகானே ஆப்கானிஸ்தான் அணியினரை அழைத்து, அவர்களையும் கோப்பையுடன் புகைப்படம் எடுக்க வைத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

  போட்டி என்பதையும் தாண்டி, முதல் போட்டியை விளையாடிய ஆப்கானிஸ்தானை பாராட்டும் வகையிலும், நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும் செயல்பட்ட ரகானேவை பலரும் பாராட்டி வருகின்றனர். #INDvAFG #AjinkyaRahane
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரே நாளில் 24 விக்கெட்டுக்கள் வீழ்ந்ததன் மூலம் 116 வருடத்திற்குப் பிறகு இந்தியா- ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. #INDvAFG
  இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் பெங்களூருவில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. நேற்றைய முதல்நாளில் இந்தியா 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

  இன்று நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 109 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. அதன்பின் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 103 ரன்னில் சுருண்டது. இதனால் ஒரேநாளில் 24 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது.  கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் மூன்று முறைதான் 24 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தப்பட்டது. 1888-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்டின் 2-வது நாளில் 27 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரேநாளில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டாகும்.  அதன்பின் 1902-ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்டின் முதல் நாளில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்ப்டது. அதன்பின் 116 வருடம் கழித்து தற்போது 24 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. 1896-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா போட்டியில் 2-வது நாள் 24 விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த தவான், ரஷித் கான் பந்தை துவம்சம் செய்ய இதுதான் காரணம் என்கிறார் தவான். #INDvAFG
  இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டே நாளில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள் குவித்தது. தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் சேர்த்தார். 87 பந்தில் சதம் அடித்த தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன் சதத்தை பூர்த்தி செய்து சாதனைப் படைத்தார்.

  ஆப்கானிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 34.5 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சராசரியாக 4.42 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.  தவான், ரஷித் கான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்கள். அப்போது வலைப்பயிற்சியின் போது ரஷித் கானை பந்தை எதிர்கொண்டேன். இதுதான் ரன் குவிக்க உதவியது என தவான் கூறியுள்ளார்.

  இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘ரஷித் கான் டாப்-கிளாஸ் பந்து வீச்சாளர். நான் அவருடைய பந்து எளிதாக சிரமமின்றி எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சை ஐபிஎல் தொடரின்போது இரண்டு ஆண்டுகளாக வலைப் பயிற்சியின்போது எதிர்கொண்டேன். அந்த பயிற்சி தற்போது உதவிகரமாக இருந்தது’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print