ஏற்கனவே 2 தடவ டக் அவுட்.. நடுவர் தீர்ப்பை நக்கலடித்த ரோகித்.. வைரல் வீடியோ

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஏற்கனவே 2 தடவ டக் அவுட்.. நடுவர் தீர்ப்பை நக்கலடித்த ரோகித்.. வைரல் வீடியோ
Published on

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

முதல் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் பேடில் பட்டு 2 பவுண்டரி கிடைத்தது. இது நடுவரால் லெக் பைய்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால் முதல் ஓவர் முடியும் வரை ரோகித் 0 ரன்னில் இருந்தார். இதனையடுத்து 2-வது ஓவர் ஓமர்சாய் வீசினார். உடனே லெக் அம்பயராக இருந்த வீரேந்தர் சர்மாவிடம் இது குறித்து நக்கலாக ரோகித் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.

அதில் ஏய் வீரேந்தர் முதல் பந்தை லெக் பைசாக கொடுத்தாயா? அந்த பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளேன் என சிரித்தப்படி கூறினார். நடுவரும் அதற்கு சிரித்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com