search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து"

    • முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.

    பின்னர் தொடர் யாருக்கு என்பது நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி அதிகாலை) நடைபெற்றது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. 

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வில் ஜேக்ஸ் (73), ஹாரி ப்ரூக் (43 அவுட் இல்லை), ஜோஸ் பட்லர் (58 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 32.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி (நாளைமறுதினம்) நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ×